அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்ந்தது தான் விளக்கு. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் இது உணர்த்துகிறது.பொதுவாக, வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், மகாலட்சுமி அங்கு வாசம் செய்வாள். தீய சக்திகளும் நம்மை அண்டாது காப்பாள். விளக்கு எரியாத இடத்தில் வழிபட கூடாது. எந்த காரணத்தை முன்னிட்டு எரியும் விளக்கை அணைக்கக் கூடாது. அணைந்த விளக்கை ஏற்றலாம். விளக்கு திரியை நிமிண்டி ஏற்றிய பின் கையில் பற்றிய எண்ணெயை தலையில் தடவக் கூடாது.