மழைக்காலத்தில் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்கலாம். மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்தால் காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம்.
கனமழையை அடுத்து உபரிநீர் வடிந்த பின் நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம். வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும். காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து செடிகள் சாயாமல் பாதுகாக்கலாம். மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.
பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை குடில்களை காப்பீடு செய்திருக்க வேண்டும். குடிலின் அடிப்பாகம் நிலத்துடன் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும். உள்பகுதியில் காற்று உட்புகாமல் இருக்க கதவு ஜன்னல்களை மூட வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்திலுள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும்.
அழகுமலை, துணை இயக்குனர் சக்திவேல்,
உதவி இயக்குனர்
தோட்டக்கலைத்துறை, சிவகங்கை
94895 05957