இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
00:00

அவசியமான குறிப்பு!
சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை சந்திக்கச் சென்றேன். மும்முரமாய் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அது என்னவென்று விசாரித்தேன்.
எழுதியதை காட்டினார். அதில், அவரின் இறப்புக்குப் பிறகு என்னென்ன செய்ய வேண்டும்; இறப்புச் சான்றிதழுக்கு எப்படி பதிவு செய்ய வேண்டும்; எத்தனை பிரதி வாங்கி, யார் யாருக்கு தர வேண்டும் என்ற முழு விபரமும் இருந்தது.

அதோடு, வாரிசு சான்று வாங்குவது பற்றியும், அதன் பிரதிகளை யார் யாருக்கு கொடுக்க வேண்டும்; சொத்துக்களை எப்படி மாற்றிக் கொள்வது போன்ற விபரமும் மிகத் தெளிவாய் இருந்தது. அதனுடன், ரேஷன் கார்டு, டூ வீலர் இன்ஷுயூரன்ஸ் மற்றும் எல்.ஐ.சி., லைப் இன்ஷுரன்ஸ் என, நிறைய விபரங்களை தெளிவாக எழுதியிருந்தார்.
தன் இறப்புக்குப் பிறகு, குடும்பம் அவதிப்படக் கூடாது என்ற அவரின் உயர்ந்த உள்ளம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நானும் அவர் வழியை பின்பற்றத் துவங்கி விட்டேன்.
— மூ. மோகன், வேலுார்.

இப்படியும் உதவலாமே!
சமீபத்தில் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு அம்மனுக்கு சாற்றிய புடவைகளை விலை நிர்ணயம் செய்து, பக்தர்கள் வாங்கும் வண்ணம் ஒரு கொடியில் தொங்க விட்டிருந்தனர்.
சில பெண் பக்தர்கள், அதில் குறிப்பிட்டிருந்த விலைக்கு, புடவை வாங்கிச் சென்றனர். அங்கு வந்த வயதான பெண்மணி ஒருவர், 10 புடவைகளை வாங்கினார்.
இவ்வளவு புடவை வாங்குகிறாரே என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, கோவிலுக்கு வந்திருந்த விதவை, ஏழை பெண்கள், உடல் ஊனமுற்ற மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்றோருக்கு, வாங்கிய புடவைகளை ஒவ்வொன்றாக இலவசமாக கொடுத்தார்.
அவரின் இந்த சேவை, 'மக்கள் சேவை மகேசன் சேவை'யாக எனக்கு பட்டது.
- டி.கே. சுகுமார், கோவை.

தோட்டம் காத்திடுவோம்...
வெளிநாட்டிலிருந்த எங்கள் மகள், பிரசவ நாளை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். நாங்கள் அங்கே சென்று, அவளுக்கு ஒத்தாசையாய் ஆறு மாதங்கள் இருந்து வர வேண்டிய நிலை.
எங்கள் வீட்டை சுற்றியிருந்த பசுமையான தோட்டத்தை, குழந்தைகளை போல் பாவித்து, தினமும் இரண்டு முறை நீர் ஊற்றி, வளர்த்தேன். செடி, கொடிகள் அனைத்தும், திரும்பி வருவதற்குள் வாடி வதங்கி சருகாகிப் போகுமே என்ற கவலை மனதை வாட்டியது.
அந்நேரத்தில் ஒரு யோசனை தோன்றவே, எங்கள் தெருவில், வீட்டு வேலைக்கு வரும் மூதாட்டியை அணுகினேன்.
'அம்மா... நீங்க தினம் ஒரு மணி நேரம் ஒதுக்கி, இந்த வீட்டு தோட்டத்தை பராமரியுங்கள். அதற்கென்று தனியாக சம்பளம் கொடுத்து விடுகிறேன். அது தவிர, இங்கு விளையும் பூக்கள், காய் மற்றும் கனிகளை நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்.
'நாங்கள் வெளிநாடு சென்று திரும்பி வரும்போது, இப்போது விட்டுச் சென்றதை போன்றே தோட்டத்தை அப்படியே திருப்பி கொடுங்கள். செய்வீர்களா?' என்று கேட்டேன்.
'நிச்சயம் முடியும்...' என ஒப்புக்கொண்டார், மூதாட்டி.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தபோது, பசுமை மாறாமல், சருகுகளை அகற்றி, பளிச்சென்று சுத்தமாக வைத்திருந்ததை பார்த்ததும் வியப்படைந்தேன்.
வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள், இதுபோன்ற சூழலில், பராமரிப்பாளரை நியமித்து, ஆசை ஆசையாய் வளர்த்த செடி, கொடிகளை காப்பாற்றிக் கொள்ளலாமே!
கே. ஜெகதீசன், கோவை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X