அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
00:00

* எஸ். சுப்பிரமணியன், செங்கோட்டை, தென்காசி: நான் வாய் பேச்சில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக நண்பன் ஒருவன் கூறுகிறானே...
அவர் சொல்வது சரிதான். வாய் பேச்சை காட்டிலும், அதிகமான கருத்துக்களை அவரது மவுனம் பிரதிபலிக்கும் என்பதைச் சொல்லி வையுங்கள்!

ஓ.என். ராமநாதன், மதுரை: நீர், ஆறு நாடுகளில் சுற்றிய புத்தகம் பற்றிய விமர்சனத்தை, 'தினமலர்' இதழில் படித்தேன். அப்போது, டீ வாங்கி வரும் வேலையை கவனிப்பது யார்?

ஸ்டாலின் தான் - நமது முதல்வர் அல்லர். அவர், காலை, 11:00 மணிக்கும், மாலை, 4:00 மணிக்கும் அலுவலகத்திற்கே கொண்டு வந்து விடும், டீ கடை உதவியாளர்!

* சி. சந்திரபாலன், நெல்லை: லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் பற்றி தினசரி செய்தி வருகிறது... ஆனால், நேர்மையான அரசு அதிகாரிகளைப் பற்றி செய்திகள் வருவதில்லையே ஏன்?
இறையன்பு, சைலேந்திரபாபு, ககன்தீப் சிங் பேடி போன்ற நேர்மையான சில அதிகாரிகள் பற்றி, நம் நாளிதழில் தினசரி செய்தி வெளியாகிறதே... நீங்கள் தினசரியைப் படிக்காமல், ஞாயிறு மட்டும் தான் படிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது!

* சி. கோபால், குனியமுத்துார், கோவை: அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டால், பணியிடை நீக்கம் தான் செய்யப்படுகின்றனர்; அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்தால் என்ன?
கோபால்... நீங்கள் சொல்வது சரிதான்... அத்துடன், அவர்களை, 'கம்பி' எண்ணவும் செய்து விடவேண்டும்!

எஸ்.வைத்தியநாதன், மதுரை: மணி... சென்னை பெருமழை, வெள்ளத்தை எப்படி சமாளித்தீர்கள்?
ஐந்து, 'ஹேண்ட் கியர்' உள்ள, 'போர்வீல் டிரைவ்' உடன் உள்ள, மஹேந்திரா ஜீப்பை பயன்படுத்தினேன்!

ஆர். சேஷாத்திரி, சென்னை: வெளிநாட்டு கார் நம் நாட்டு சாலைகளுக்கு ஒத்து வருமா?
நகரங்களில் உள்ள, 'ஸ்பீடு பிரேக்கர்'களில் மட்டும் 'ஸ்போர்ட்ஸ்' கார்களை கவனமாக ஓட்ட வேண்டும்... ஏன் என்றால் அவை உயரம் குறைவானவை; காரின் கீழ்பக்கம் தரையில் இடித்து விடும். நெடுஞ்சாலைகளில், 200 கி.மீ., வேகத்தில், 'ஜாலி'யாக ஓட்டலாம்!

எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி: 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் இருந்து வெளியேறிய, 'கார்டூனிஸ்ட்' மதன் என்ன செய்கிறார்?
'தினமணி' நாளிதழில், 'பாக்கெட் கார்ட்டூன்' மற்றும் 'ரெகுலர் கார்ட்டூன்' வரைந்து, பரவசப்படுத்திக் கொண்டுள்ளார்; அவ்வப்போது, 'டிவி'யிலும் தோன்றுகிறார்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X