திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2021
00:00

நவ., 25, பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம்

சபீதா ஜோசப் எழுதிய, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:
உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பும் அமெரிக்காவால், குட்டி நாடான, கியூபாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்படியாவது, காஸ்ட்ரோ ஆட்சிக்கு முடிவு கட்டி, தனக்கு கட்டுப்படும் ஒருவரை அதிபராக்க, 49 ஆண்டுகளாக பல முயற்சிகளையும் செய்து பார்த்தது. ஆனால், காஸ்ட்ரோவிடம், அமெரிக்கா பாச்சா பலிக்கவில்லை.
ஒருமுறை வேடிக்கையாக, 'கொலை முயற்சிகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்று ஒலிம்பிக் போட்டி வைத்தால், தொடர்ந்து எனக்கு தான் தங்கப்பதக்கம் கிடைக்கும்...' என்று சொன்னார், காஸ்ட்ரோ.
அதற்கு காரணமும் இருக்கிறது.
காஸ்ட்ரோவை தீர்த்துக்கட்ட, அமெரிக்க உளவுப் படையான, சி.ஐ.ஏ., 1959 முதல் நேரடியாகவே பல முயற்சிகளை எடுத்தது. தோல்வி தான் ஏற்பட்டது.
காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்காவில் தஞ்சமடைந்த அவரது எதிர்ப்பாளர்களுக்கு உதவியதுடன் மாபியா கும்பல்களிடம் பொறுப்பை ஒப்படைத்தது, சி.ஐ.ஏ., ஆனால், எல்லாவற்றிலும் தோல்வி தான் கிடைத்தது.
பிரபல நாவலாசிரியர் இயான் பிளெமிங்கை சந்தித்தார், அதிபர் ஜான் கென்னடி. ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கியவர், இயான் பிளெமிங். கியூபா அதிபர் காஸ்ட்ரோவை கொலை செய்ய ஏதாவது யோசனை செய்யும்படி அந்த நாவலாசிரியரிடம் கேட்டாராம், கென்னடி.
காஸ்ட்ரோவை கொல்ல நேரடியாகவும், மற்றவர்கள் மூலமாகவும், 638 முயற்சிகளை, சி.ஐ.ஏ., எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, 2006ல் டாகுமென்டரி படமே எடுக்கப்பட்டது.
பற்ற வைத்தால் வெடிக்கும் சுருட்டு, விஷம் கலந்த முக பூச்சு பவுடர், கிரீம், விஷம் தேய்த்த டைவிங் சூட் என்று எத்தனையோ வழிகளில் காஸ்ட்ரோவை குறி வைத்தது, சி.ஐ.ஏ.,
காஸ்ட்ரோவுக்கு, மரிட்டா லோரன்ஸா என்று ஒரு காதலி. அவரை எப்படியோ தன் வலையில் வீழ்த்திய, சி.ஐ.ஏ., கொடிய விஷம் கலந்த கிரீமை கொடுத்து, காஸ்ட்ரோவை கொல்ல முயன்றது.
காதலியே தன்னை கொல்ல வந்திருப்பதை கண்டுபிடித்து விட்டார், காஸ்ட்ரோ. தன்னிடமிருந்த துப்பாக்கியை காதலியிடம் கொடுத்து, 'நான் சாக வேண்டும் என்பது தான் உன் விருப்பம் என்றால், என் மார்பிலே சுடு...' என்று நெஞ்சை நிமிர்த்தியபடி நின்றார், காஸ்ட்ரோ.
சப்தநாடியும் ஒடுங்கி, மனம் மாறினார், மரிட்டா.
புரட்சி மூலம், 1959ல் அதிகாரத்துக்கு வந்ததும், நிலச்சீர்த்திருத்த நடவடிக்கையில் இறங்கினார், காஸ்ட்ரோ. அமெரிக்க நிறுவனங்கள் வைத்திருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு ஏற்றது. இதனால் கோபமடைந்தது அமெரிக்கா.
ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்க, 1960ல் ஒப்பந்தம் போட்டது, கியூபா. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயை சுத்திகரிக்க, கியூபாவிலிருந்த அமெரிக்க நிறுவன எண்ணெய் நிறுவனங்கள் மறுத்தன. இதனால், அந்த நிறுவனங்களை கியூபாவிலிருந்து வெளியேற உத்தரவிட்டார், காஸ்ட்ரோ.
அமெரிக்காவுடன் கியூபாவுக்கு மோதல் தொடங்கவும், ரஷ்யாவுடன் நெருக்கமாக இந்த சம்பவம் காரணமாக அமைந்தது.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-நவ-202103:08:04 IST Report Abuse
Natarajan Ramanathan காஸ்ட்ரோவை பற்றிய உண்மைக்கு புறம்பான எத்தனேயோ கதைகளில் சிலதான் வாரமலரில் வந்திருப்பதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X