'ஆப்பிள்' நிறுவனம், ஐ.ஓ.எஸ்., 15.1.1 ஐ வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட், குறிப்பாக ஐபோன் 12, ஐபோன்13 வரிசை போன்களுக்கானதாகும். அழைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சில பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
பிற மாடல் போன்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இது மிகவும் சிறிய அளவிலான அப்டேட் தான். இதற்கிடையே, அனைத்து மாடல் போன்களுக்குமான 15.2 அப்டேட்டை வழங்கும் முயற்சியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.