பாசனநீரின் தரம் பார்ப்பது அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
00:00

நிலமும் நீர் பாசனத்திற்கேற்ற தண்ணீரும் பயிர் விளைச்சலுக்கு அவசியம். எனவே பாசன நீரின் குணம், தரத்தை அறிந்து கொள்வது முக்கியமானது.

நீரின் குணம் அதில் கரைந்துள்ள உப்பு சத்துகளின் அளவு, தன்மையைப் பொறுத்து மாறும். சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் சேர்ந்த உப்புகள் நீரில் கரையக்கூடியவை. மேலும் நீரில் கரைந்துள்ள உப்புகளின் மொத்த அளவு, உப்பில் சோடியம் வகையின் விகிதம், கார்பனேட், பை கார்பனேட் உப்புகளின் அளவு, போரான் போன்ற கனிமப் பொருள் ஊட்டங்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருப்பது போன்ற காரணங்களும் நீரின் குணத்தை நிர்ணயிக்கின்றன.

பயிர் மகசூலை பொறுத்து நீரில் கரைந்துள்ள உப்புகளின் மொத்த அளவு இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில்150 மில்லிகிராம் அல்லது அதற்கு குறைவாக உப்புகள் இருந்தால் நல்ல மகசூல் பெறலாம். 150 - 500 மி.கி வரையிருந்தால் திருப்தியான மகசூல், 500 - 1000 மி.கி., வரை இருந்தால் குறைந்த மகசூல் கிடைக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 1500 மில்லிகிராமும் அதற்கு மேலும் இருந்தால் உப்பு எதிர்ப்பு சக்தியுள்ள தாவர வகைகளை சாகுபடி செய்யலாம்.

பாசன நீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு லிட்டருக்கு 1500 மி.கி. மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக உப்புகள் சேர்ந்தால் அவை குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும்.
நீரின் கார அமிலத்தன்மை 7.5க்கு மேல் இருந்தாலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 300 மி.கி கார்பனேட், 2 மி.கி. இரும்பு, ஒரு மி.கி. மேலான அளவில் மாங்கனீஸ் இருந்தால் குழாய்களில் உப்பு படிகின்றன. எனவே அதிக உப்புத்தன்மை கொண்ட தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இளையராஜன்
இணைப்பேராசிரியர் மண்ணியல்துறை
பன்னீர்செல்வம்
இயக்குனர், நீர் நுட்ப மையம் வேளாண் பல்கலைகழகம்
கோவை,
94436 73254

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202104:20:39 IST Report Abuse
NicoleThomson தினமலர், உங்களிடம் ஒரு நல்ல பண்பு என்றால் குவாலிட்டி, உதாரணத்திற்கு இங்கே பல விவசாய மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் தெரியும் போர்வெல்லில் இருந்து வரும் நீர் ஹார்ட்வாட்டர் என்று, மொட்டையாய் அதனை பயன்படுத்தாதீங்க என்று மாதச்சம்பலம் வாங்குறவங்க சொல்லி திரிவாங்க, அதனை சமன்படுத்துவது எப்படி என்று ரிசர்ச்சி பண்ணி இங்கே எழுதியிருந்தது நன்று,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X