சவாலான விலையில் புதிய யமஹா ஆர்15 எஸ் வி3.0 பைக் அறிமுகமாகி உள்ளது. இதன் 155 சிசி லிக்யூடு கூல்டு எஸ்ஓஎச்சி எப்ஐ இன்ஜின், 18.6 பிஎஸ் பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இன்ஜினுக்கு வலுவான ஆற்றல் அளிக்க 'வேரியபிள் வால்வ் ஆக்சுவேஷன்' தொழில்நுட்பம் இடம் பெற்று உள்ளது. இது, கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை கொடுக்கும்.
ஏரோடைனமிக் டிசைனில் எல்இடி இரட்டை ஹெட்லைட், டெயில் லைட், பன்முக சிறப்பு வசதிகளுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர்ஷிப்ட் இன்டிகேட்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அலாய் வீல், ஸ்லிப்பர் கிளட்ச், சைடு ஸ்டாண்டு இருந்தால் இன்ஜின் 'கட்- ஆப்' தொழில்நுட்பம், டெல்டா பாக்ஸ் பிரேம், அலுமினியம் ஸ்விங் ஆர்ம், சொகுசான பயணத்துக்கு 'யுனிபாடி' சிங்கிள் சீட் அமைப்பு, இரண்டுவிதமான ஒலியுடன் ஹார்ன் சிறப்பம்சம். ரேசிங் புளூ வண்ணத்தில் கிடைக்கும்.
விலை: ரூ. 1.59 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: Bikers yamaha - 98413 65776
JBM YAMAHA - 97102 03030
கோவை டீலர்: Orpi Yamaha - 989461 1175
Season motors - 96551 21000