ஊரின் பெயர் சங்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
00:00

கார்த்திகை மாதத்தில், சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் காண்பது விசேஷம். திருமாலின் சின்னங்களில் முக்கியமானது, சங்கு.
சங்கு என்ற சொல்லுக்கு, புனித பாத்திரம் என பொருள். இதில், பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை நிரப்பி, சிவனுக்கு அபிஷேகம் செய்வர்.
சூடாகவே இருப்பார், சிவன். நெற்றிக்கண் கொண்டவர் என்பதால், அதிக வெப்பத்தைக் கொண்டவர். இதனால் தான், அவரைக் குளிர வைக்க வேண்டும் என்பதற்காக, சிவலிங்கத்துக்கு மேல் தாரா என்ற பாத்திரத்தை தொங்க விட்டிருப்பர்.
தாரா என்றால் சொட்டு. தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சொட்டு சொட்டாக வடிக்கும் கண்ணீர் என்பது, இதன் விளக்கம்.
இந்த பாத்திரத்தின் அடியில் சிறுதுளை இருக்கும். இதன் வழியாக தண்ணீர் லிங்கம் மேல் கொட்டும்போது, சிவன் குளிர்ந்திருப்பார்.
கார்த்திகை மாதத்தில், சிவனுக்கு நெருப்பால் அபிஷேகம் நடக்கும். திருவண்ணாமலையில் மிகப்பெரிய தீபம் ஏற்றப்படும். இதை தீபாராதனை போல எடுத்துக் கொள்ளக் கூடாது. நெருப்பு அபிஷேகம் என பொருள் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சூடாக இருக்கும் பெருமானுக்கு, தாரா அபிஷேகம் போதாது. எனவே, அவருக்கு சங்குகளில் புனிதநீர் நிரப்பி அபிஷேகம் செய்வர். இது 108, 1008 என்ற எண்ணிக்கைகளில் இருக்கும்.
இதற்காக, கார்த்திகையில் திங்கட் கிழமையை தேர்ந்தெடுக்க காரணம், இது சந்திரனுக்குரியது என்பதால் தான். சந்திரன் குளிர்ந்த கிரகம். சூடாக இருக்கும் ஒருவருக்கு, குளிர்ந்த கிரகத்திற்குரிய நாளில் அபிஷேகம் செய்வது, குளிர்ச்சியை அதிகமாக்கும்.
மகாவிஷ்ணுவின் சின்னமும் சங்கு. நேபாள நாட்டில் ஒரு ஊரின் பெயரே சங்கு. நேபாள தலைநகர் காத்மாண்டில் இருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ளது, இந்த ஊர். இங்குள்ள பெருமாள் கோவிலின் மூலவர், 'சங்கு நாராயணன்' எனப்படுகிறார். மிகப்பழமையான கோவில் என்பதால், தொல்லியல் துறை இதை பராமரிக்கிறது.
யாராவது இறந்து விட்டால், சங்கு ஊதுகின்றனர். காரணம், சங்கொலி பிறப்பற்ற தன்மையை தரும் என்பதால் தான். அதிக கோபம் வந்து, 'உனக்கு சங்கு ஊதிடுவாங்க...' என யாராவது திட்டினால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை.
இனி, பிறப்பு இல்லை என்று மகிழவே வேண்டும். சங்காபிஷேகம் பிறப்பறுக்கும் வழிபாடு. இதை தரிசித்து பிறவா வரம் பெறுவோம்.

தி. செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X