இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2021
00:00

படிப்பு வரவில்லையா, கவலை வேண்டாம்...
என் நண்பரின் மகன், பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு, கார் மெக்கானிக் வேலைக் கற்று வருவதாக, வருத்தமாகக் கூறினான்.
'இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது... ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி தான் வளரும். பாரதிக்கு, கணக்கு வரவில்லை; கவிதை நன்றாக வந்தது. ராமானுஜருக்கு, கணக்கு வந்தது; கவிதை எழுத வரவில்லை.
'யாருக்கு எது நன்றாக வருகிறதோ அதைச் செய்தால் போதும். எல்லாருமே டாக்டராகவும், இன்ஜினியராகவும் மாறி விட்டால், மற்ற வேலைகளை செய்வது யார்...' என, கேட்டேன்.
சற்றே குழம்பியவன், 'எங்கள் குடும்பத்தில் ஆசிரியராகவும், வக்கீலாகவும், இன்ஜினியராகவும் உள்ள மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டேன் என்கின்றனரே...' என, குறைபட்டான்.
'அது உங்கள் தவறு. தனக்கு படிப்பு வரவில்லை என்றாலும் ஊர் சுற்றாமல், கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்பவனை மனதார பாராட்டி உற்சாகப்படுத்துங்கள். தாழ்த்திப்பேசி, அவனுக்குள் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்காதீர்கள்.
'பிற்காலத்தில் அவன் உங்கள் பெயர் சொல்லும் பிள்ளையாக, ஒரு பெரிய தொழிலதிபராக கூட உருவாகலாம்...' என்றேன். புரிந்து கொண்டான், நண்பன்.
நண்பர்களே... உங்கள் வீட்டிலும் இப்படி பிள்ளைகள் இருக்கலாம். அவர்களை மட்டம் தட்டி, மூலையில் உட்கார வைக்காமல், தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கையை வளர்த்துப் பாருங்கள். படித்தவர்களை விட பெரிய சாதனையாளராக அவர்கள் வருவர்.
— பா.சுபானு, காரைக்குடி.

இளநீர் குடுவையில் செடி!
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணை கடை வீதியில் கண்டேன்.
கடைகளில் இளநீர் குடித்து துாக்கி எறியப்பட்ட இளநீர் கூடுகளை, சேகரித்துக் கொண்டிருந்தார். இவற்றை காய வைத்து அடுப்பு எரிக்க பயன்படுத்துவார் என்று நினைத்திருந்தேன்.
என் மகளின் பிறந்த நாள் அன்று, இளநீர் குடுவையில் வளர்க்கப்பட்ட பூச்செடியை பரிசாக கொண்டு வந்து கொடுத்தார்.
இளநீர் குடுவையில் வளர்க்கப்பட்ட செடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வியந்து, அவரிடம் இதுபற்றி விசாரித்தேன்.
'தெரு ஓரங்களிலும், கடைகளிலும் குடித்து வீசப்படும் இளநீர் குடுவைகளை சேகரித்து, சுத்தம் செய்து, அடிப்பகுதியில் நீர் வடிவதற்காக ஓட்டை போடுவேன். பின் குடுவையில் மண் நிரப்பி, சிறு தானிய வகைகள், மூலிகை செடிகள், கீரை வகைகள், அழகுக்காக வளர்க்கப்படும் பூச்செடிகள் போன்றவற்றை வளர்க்கிறேன்.
'இளநீர் ஓடு மிகவும் கனமாக இருப்பதால், ஈரப்பதத்தை தக்க வைத்து, செடிகளை வாட விடாமல் பாதுகாக்கும். மேலும், கூடுகளில் உள்ள செடிகளை, பெரிய தொட்டிகளுக்கு மாற்ற வேண்டுமானாலும் கூட்டோடு சேர்த்து நட்டு வைக்கலாம், நாளடைவில் இவை மக்கி உரமாகி விடும்.
'இவற்றில் உள்ள தாது உப்புகள், மின் அயனிகள் செடிகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை தரும். இதன் மூலம் பிளாஸ்டிக் தொட்டிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.
'இப்படி வளர்க்கப்படும் செடிகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்; எனக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது...' என்றார்.
வீட்டு வேலை செய்யும் சாதாரண பெண்மணியிடம் எவ்வளவு திறமைகள் ஒளிந்திருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு, பாராட்டினேன்.
- என். குர்ஷித், நெல்லை.

பிஞ்சு நெஞ்சில் சேவை விதைப்போம்!
சீர்காழியில் உள்ள, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின், 125வது ஆண்டு துவக்க விழா, சமீபத்தில் நடைபெற்றது. உலக நுாலக தந்தை அரங்கநாதன் பயின்ற பள்ளி அது.
அங்கு படித்த பழைய மாணவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று கூடி, தற்போது படிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 65 அங்குல,
எல்.இ.டி., 'டிவி'யை வாங்கி, விழாவில் பரிசாக அளித்தனர்.
பழைய மாணவர்களில் ஒரு சிலர், தங்கள் குழந்தைகளையும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர். அந்த குழந்தைகள் ஒன்று கூடி பேசியபோது, 'பெரியவனான பிறகு நானும், எங்க அப்பாவை போல, நான் படிக்கிற ஸ்கூலுக்கு நிறைய்ய வாங்கிக் கொடுப்பேன்...' என்றது, ஒரு குழந்தை.
'எங்க ஸ்கூல்ல, சைக்கிளை வெயிலில் தான் நிறுத்தறோம். படிச்சு பெரியாளானதும், எங்க அம்மாவை போல, நான் படிச்ச ஸ்கூலுக்கு, 'சைக்கிள் ஷெட்' கட்ட முயற்சி பண்ணுவேன்...' என்றான், ஒரு பையன்.
'எங்க அப்பா - அம்மாவை போல...' என்று சொல்லும்போது, குழந்தைகளுக்கு சேவை மனப்பான்மை உருவாவதோடு, பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் மீது மரியாதை ஏற்படுகிறது.
தாங்கள் படித்த பள்ளிக்கோ, பிறந்த மண்ணுக்கோ, கோவில் குளங்களுக்கோ, முதியோர் இல்லத்திற்கோ, ஏதாவது ஒரு வகையில் சேவை செய்யப் போகும்போது, தங்கள் குழந்தைகளையும் அழைத்து சென்றால், அந்த பிஞ்சு நெஞ்சங்களிலும் சேவை மனப்பான்மையை வித்திடலாமே!
- எ. வரதராஜன், சீர்காழி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-நவ-202106:12:50 IST Report Abuse
D.Ambujavalli முதல் பதிவு,, இரண்டாவது இரண்டுமே நேர்மறை எண்ணம் வளர்ப்பதையும், எந்தப் பொருளையும் உபயோககாரமாகவும், புதுமையாகவும் மாற்றலாம் என்னும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் உணர்த்துகின்றன. பாராட்டுக்கள் மூன்றாவது, பெரியோர்கள் செய்யும் நற்செயல்கள் நல்ல முன்னுதாரணமாவதை அறிவுறுத்துகிறது
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-நவ-202104:59:11 IST Report Abuse
NicoleThomson சீர்காழி என்று படித்ததும் அங்கேயே நின்று விட்டது எனது கண்கள் , இன்று எனக்கு அங்கே ஓட்டோ உறவோ இல்லையே ஆனால் மனம் மட்டும் உழலுகிறதே
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-நவ-202122:13:39 IST Report Abuse
Girija @பா.சுபானு, காரைக்குடி. உங்கள் அறிவுரை தவறு, பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று பள்ளி படிப்பை முடிக்கவைத்து பிறகு ஐ டி ஐ போன்ற தொழிற் கல்விக்குத்தான் அனுப்பவேண்டும். இப்பொழுதே மெக்கானிக் வேலை என்றால் கூட நட்பை தான் வளர்க்கும்.
Rate this:
krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-202113:52:12 IST Report Abuse
krishsrkmiga...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X