அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
00:00

கலக்கும் வலை!
உலகை கலக்கும் சமூக வலைதளங்கள் பேஸ்புக், வாட்ஸ் ஆப், யுடியூப், டிவிட்டர். இவை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்...

பேஸ்புக்!
உலகின் முதன்மையான வலைத்தளம், பேஸ்புக். தமிழில் முகநுால் என்பர். இதில், 13 வயதிற்கு மேற்பட்டோர் பெயரைப் பதிவு செய்து கருத்து பரிமாறலாம். நட்பு வட்டத்தை ஏற்படுத்தலாம்.
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டப்படி, இந்தியாவில், 18 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைத்தளத்தில் உறுப்பினராக முடியாது. இது, சிறார் பாதுகாப்பு கருதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முகநுாலில் நாள் ஒன்றுக்கு, 35 கோடி புகைப்படங்கள், 'அப்லோடு' செய்யப்படுகின்றன. அமெரிக்கரான மார்க் சுகர்பெர்க் இந்த சமூக வலைத்தளத்தைத் துவங்கி நிர்வகிக்கிறார். இதன் தலைமையிடம் அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ளது.
வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஆசியா பசிபிக் நாடுகளில் வசிப்போரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

யுடியூப்!
வீடியோ என்ற காணொலி பதிவிடுவதற்கான வலைதளம், யுடியூப். அமெரிக்காவை சேர்ந்த சாத் ஹர்லே, ஸ்டீவ் சென், ஜாவேத் கரிம் ஆகியோர் இணைந்து, 2005ல் துவங்கினர். கூகுள் நிறுவனம், 2006ல் இதை வாங்கி நிர்வகித்து வருகிறது.

வாட்ஸ் ஆப்!
உலகில் அதிகமாக விரும்பப்படும் கருத்துப்பரிமாற்ற தளம் வாட்ஸ் ஆப். அமெரிக்காவைச் சேர்ந்த பிரையான் ஆக்டன், ஜான் காம் ஆகியோர் உருவாக்கினர். இப்போது, பேஸ்புக் நிறுவனம் நிர்வகிக்கிறது.
எழுத்துகளாலான செய்திகள் மட்டுமின்றி, படம், புகைப்படம், ஒலிக்கோப்பு, காணொலி மற்றும் இருப்பிட அடையாளத்தையும் இதன் வழியாக பகிர்ந்து கொள்ளலாம்.

டிவிட்டர்!
அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ நகரில் இயங்குகிறது, டிவிட்டர் நிறுவனம். முக்கியமான சமூக வலைத்தளங்களில் ஒன்று. இதில், 140 வரிகளில் குறுகிய செய்திகளை அனுப்பலாம். இது, தொடர் குழு வலையமைப்புச் சேவை.
இதில் பதிவு செய்யும் செய்தி, 'டிவீட்' எனப்படுகிறது. அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ நகரில், 2006ல் துவங்கப்பட்டது. ஜாக் டோர்சே, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம் ஆகியோர் துவங்கினர்.
உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த வலைதளத்தில் கணக்கு துவங்கி, கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.

அழகிய கொரில்லா!
கிழக்காசிய நாடான ஜப்பான் மிருக காட்சிசாலையில் ஒரு கொரில்லா உள்ளது. இதன் பெயர் ஷபானி. உலகிலேயே அழகானது.
இதன் அழகை காண உலகெங்கும் இருந்து சுற்றுலா பயணியர் குவிந்த வண்ணம் உள்ளனர். மிருக காட்சி சாலையில், ஆட்கள் தேவை விளம்பரத்தில் மாடலாக, இந்த கொரில்லாவின் படத்தை பயன்படுத்துகின்றனர்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X