என் வயது, 60; ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் கணவரும் ஆசிரியர்.
சிறுவர்மலர் இதழை, பல ஆண்டுகளாக வாசித்து வருகிறோம். அதில் வரும் தகவல்களை வகுப்பறையில் வாசித்து, மாணவர்களை உற்சாகப்படுத்தி வந்தேன்; மாணவ, மாணவியரின் தனிப்பட்ட கருத்துகளையும் கேட்டு மகிழ்ந்தேன்.
சிறுவர்மலர் இதழில், ஸ்கூல் கேம்பஸ், சிறுகதைகள், அங்குராசு, மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், இளஸ் மனஸ், உங்கள் பக்கம் என அனைத்து பகுதிகளும், பொன்குடத்திற்கு பொட்டு வைத்தாற்போல் அழகு சேர்க்கின்றன. இதன் பணி வருங்கால சமுதாயத்திற்கு குன்றின் மேலிட்ட விளக்காய் சுடர் விடும் என்பது நிச்சயம்.
அனைவருக்கும் வரம் தரும் அறிவுப் பெட்டகமாக உள்ளது சிறுவர்மலர் இதழ்; அது மேன்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்.
- ஜானகி சவுந்தரராஜன், உடுமலை.
தொடர்புக்கு: 94426 31781