'சவுண்டுகோர்' நிறுவனம், அண்மையில் இரண்டு ஹெட்போன்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், 'சவுண்டுகோர் லைப் கியு 30' மற்றும் 'சவுண்டுகோர் லைப் கியு 35' என, இரண்டு ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டு ஹெட்போன்களுமே, எடை மிகவும் குறைவானவை. பயனர்கள், சவுண்டுகோர் செயலியை பயன்படுத்தி, 22 விதங்களில் ஈக்குவலைசரை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். இந்த இரண்டு ஹெட்போன்களும், 40 மணி நேர பிளேபேக் திறன் கொண்டவை ஆகும். 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதியை பயன்படுத்தாத பட்சத்தில், 60 மணி நேரம் இவை தாக்குப்பிடிக்கும். மேலும், பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் சப்போர்ட் செய்யும்.
வெறும் ஐந்து நிமிட சார்ஜிங்கில், நான்கு மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. 'சோனி எல்.டி.ஏ.சி., கோடெக்'கை சப்போர்ட் செய்வது என்பது உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் லைப் கியு 35 கூடுதல் வசதி கொண்டுள்ளது.
சவுண்டுகோர் லைப் கியு 30: 7,999 ரூபாய்.
சவுண்டுகோர் லைப் கியு 35: 9,999 ரூபாய்.