'மைக்ரோசாப்ட்' நிறுவனம், அதன் 'சர்பேஸ் கோ 3' எனும் புதிய லேப்டாப்பை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 'டூ இன் ஒன்' லேப்டாப், கடந்த செப்டம்பரில், உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய லேப்டாப், 60 சதவீதம் வேகமான செயல்பாட்டை கொண்டிருக்கும். காரணம், இதில் '10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 பிராசஸர்' இருப்பது தான். தற்போது 8 ஜி.பி., - 128 ஜி.பி., திறன் கொண்ட மாடல் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
10.5 அங்குல திரை
டச் சப்போர்ட்
1080 பிக்ஸல் டிஸ்பிளே
5 எம்.பி., முகப்பு கேமரா
விண்டோஸ் 11
11 மணி நேரம் தாங்கும் பேட்டரி
விலை: 57,999 ரூபாய்.