விலை குறைவான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை அமோகமாக உள்ளது. ஸ்டாண்டர்ட், 4வி என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். 2020, அக்டோ பரில் 2473 எக்ஸ்பல்ஸ் பைக் விற்ப னையாகின. இது, 2021 அக்டோபரில் 3815 ஆக அதிகரித்துள்ளது. விற்பனையில் 54.27 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.இதன் 199.6 சிசி ஏர்/கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்(ஸ்டாண்டர்ட்) 18.08 பிஎச்பி பவரையும், 16.45 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வால்வுடன் கூடிய 4வி வேரியண்ட், 19.1 பிஎச்பி பவரையும், 17.35 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு, டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம்.
விலை (எக்ஸ்ஷோரூம்)
ஸ்டாண்டர்ட் வேரியன்ட்- ரூ.1.23 லட்சம்
4வி வேரியன்ட்- ரூ.1.28 லட்சம்
சென்னை டீலர்: Southern Hero - 98845 11373
கோவை டீலர்: Suguna automobile - 98422 21233