மு. மதிவாணன், அரூர், தருமபுரி: தீவுகளை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டதுண்டா? தீவுகளைச் சுற்றி தான் கடல் இருக்குமே... கடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்குமே... அதனால், முதன் முதலில் சென்றது, ஸ்ரீலங்கா! அடுத்து, தென் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அமெரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளின் தீவுகளில் சுற்றி வந்து அங்கங்கே கடலில், 'விண்ட் சர்பிங்'கும் செய்து வந்துள்ளேன்!
* சா. சொக்கலிங்க ஆதித்தன், நெல்லை: வேளாண் சட்டங்கள், 'வாபஸ்' யாருக்கு லாபம்?
கம்யூனிஸ்டுகளுக்கும், இடைத்தரகர்களுக்கு மட்டுமே லாபம். நியாயமான விவசாயிகளுக்கு நஷ்டம்!
கே.கே. பாலசுப்ரமணியன், கோவைப்புதுார்: பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கும் மசோதா, பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளதே... மிகவும் வரவேற்கப்பட வேண்டிய மசோதா... ஆனால், அரேபிய நாடுகளில் உள்ளதைப் போல், 'அதை' வெட்டி எடுத்து விடலாம் தானே!
* க.மனோகர், நெல்லை: திராவிட கட்சிகள் எது ஆட்சிக்கு வந்தாலும், லஞ்சம், ஊழல் ஒழியாதா? அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் ஒழியுமா? அரசு பணியில், மிகக் குறைந்த சதவீதத்திலேயே, நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். ஊழல், லஞ்ச அதிகாரிகள் அனைவரையும், 'கம்பி' எண்ண அனுப்பி விட்டால், அரசு வேலை செய்ய ஆட்களைத் தயார்படுத்த பல ஆண்டுகளாகி விடுமே... என்ன செய்வது சொல்லுங்கள்!
எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி: பல்வேறு மாநிலங்களிலும், கேரள நாயர்கள், டீ கடை வைத்திருப்பதை காண முடிகிறதே... மோகனா... இது மட்டுமில்லை... முதன் முதலில் சந்திரனில் கால் வைத்த, அமெரிக்கரான, நீல் ஆம்ஸ்டிராங்கிடம், கைலி கட்டி, பனியன் போட்ட அங்கு கடை போட்டிருந்த நாயர் ஒருவர், 'ஏலக்காய் டீயா, சுக்கு டீயா?' எனக் கேட்டார் என்று, அந்த காலத்தில் ஒரு, 'ஜோக்' வலம் வந்ததாம்! வேலை செய்வதில், நாயர்கள் சாமர்த்தியசாலிகள்!
* ஜியா சென், சிட்னி, ஆஸ்திரேலியா: 'என்ன செய்வீங்களோ தெரியாது... 2026ல், அன்புமணி முதல்வர் ஆகவேண்டும்' என, அவர் அப்பா ராமதாஸ் சொல்கிறாரே... தமிழக மக்கள் அனைவரையும் வன்னியர்களாக மாற்றட்டும்... அப்போது அவர் மகன் முதல்வராகி விடுவார்!
கே. கருணாகரன், ஆழ்வார்குறிச்சி, துாத்துக்குடி: என் நண்பனுக்கு, மறதி நோய் உள்ளதே... இது யாருக்கெல்லாம் வரலாம்? மனச்சோர்வு உள்ளவர்களுக்கு வரலாம்! அதுபோக, குடும்பத்தில் யாருக்காவது, மறதி நோய் இருந்தாலும் வரலாம்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அரசு ஊழியர்கள் மிகக்குறைந்த சதவீதத்தினரே நேர்மையான முறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். மற்றவர்கள் விலைக்கு வாங்கி அமர்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அரசியலாளர்களைப் போலவே நடந்து கொள்வார்கள் என்பது உண்மை தான். மறுப்பு உண்டா?
நெல்லை மனோகர் அவர்களுக்கு அளித்த பதில் மிக மிக ஒரு தலை பட்சமானது. அரசியல்வாதிகளுக்கு எதிராக நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். மாநில அரசு அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள முடியாததற்கு இது ஒன்றே சிறந்த காரணம். அதிகாரிகள் '55' வயது வரை உழைக்கிறார்கள். நேர்மையாக இருக்க முயற்சிக்கிறார்கள். முடிவதில்லை. பதவிக்கு வரும் அரசியலாளர்களோ சந்தர்ப்பத்தை சுலபமாக பயன்படுத்திக்கொள்ளவே முயல்கிறார்கள். வருமான வரி துறையினரும் பெயருக்கு ஒரு சில அரசியல்வாதிகளை விரும்பிய பக்கம் திருப்பிக்கொள்ள சோதனை என்ற பெயரில் நாடகமாடுகிறார்கள். இது தான் உண்மை. மாற்றுக்கருத்து உண்டா?
//உள்ளதைப் போல், 'அதை' வெட்டி எடுத்து விடலாம் தானே// அருமையான யோசனை.. அதே போல் கணவருக்கு துரோகம் செய்து கள்ள காதலில் ஈடுபடும் பெண்களுக்கு அதிலும் கள்ள காதலனோடு சேர்ந்து கொண்டு கணவரையும் குழந்தைகளையும் கொலை செய்யும் பெண்களை என்ன செய்யலாம் என்றும் சொல்லி விடுங்கள் ....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.