அதர்வாவின், 'சென்டிமென்ட் டச்!'
தந்தை முரளி விட்டுச்சென்ற இடத்தை, எட்டிப் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் அதர்வா, சினிமா ரேசில் பின்தங்கி இருக்கிறார். இருப்பினும், சினிமாவில் காணாமல் போனவர்கள் பட்டியலில் சில பிரபலங்களின் வாரிசுகள் இடம் பெற்றது போன்று, தன் பெயர் வராமல், சில படங்களை தானே தயாரித்து, நடித்தும், தக்க வைத்து வந்தார். இந்நிலையில், தன் அப்பாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கொடுத்த நிறுவனங்களை அணுகி, 'அப்பாவின் முதலாளிகளாக இருந்தவர்கள், எனக்கும் முதலாளியாக மாறுங்கள்...' என்று, 'சென்டிமென்ட்' ஆக அவர்களை, 'டச்' பண்ண துவங்கி இருக்கிறார். இந்த, 'சென்டிமென்ட் டச்' அதர்வாவுக்கு, 'ஒர்க் - அவுட்' ஆனதை அடுத்து, தற்போது, 'மெகா' நிறுவனத்தின் படம் ஒன்று, அவருக்கு கிடைத்துள்ளது.
— சினிமா பொன்னையா
ஆடுகளத்தை மாற்றும், மாளவிகா மோகனன்!
விஜயைத் தொடர்ந்து, தனுஷுடன் நடித்து வரும், மாளவிகா மோகனன், போதும் போதும் என்ற அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்தபோதும், அவரை கண்டுகொள்வார் இல்லை. இதனால், கொதித்துப்போன அம்மணி, 'இப்போது என்னோட உயரத்துக்கும், உடல் எடைக்கும், 'ஆக் ஷன்' கதைகள் கிடைத்தால், ஹாலிவுட் நடிகையர் ரேஞ்சுக்கு சொல்லி அடிப்பேன்...' என்று சொல்லி, 'ஆக் ஷன்' பட இயக்குனர்களை அணுகி வருகிறார். அதோடு, சண்டை பயிற்சியாளரிடமும் பயிற்சி எடுக்கும் மாளவிகா, தன் தோரணையை மாற்றி, 'ஆக் ஷன்' தொனியில் உள்ள புகைப்படங்களையும் சுற்றலில் விட்டிருக்கிறார். அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
- எலீசா
பிரியா பவானி போடும், 'பியூச்சர் பிளான்!'
சினிமாவில் கவர்ச்சிக்கு தடா போட்டு வரும், பிரியா பவானி சங்கரை வீட்டிற்கு சென்று பார்க்கும் சினிமாக்காரர்கள், 'ஷாக்' ஆகின்றனர். அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து காட்சி அளிக்கிறார். 'இதே தரிசனத்தை கேமரா முன் காண்பித்தால் காசு மழை கொட்டுமே அம்மணி...' என்று, அவர்கள் காது கடித்தால், கடுப்பாகி விடுகிறார், நடிகை. 'சினிமாவுல நிதானம் ரொம்ப முக்கியம். கவர்ச்சிதானே என்று கதவை திறந்தால் ஓரிரு படங்களோடு தோலுரித்து மார்க்கெட்டை ஊத்தி மூட வைத்து விடுவர். அதனால், இப்போதைக்கு அடக்கி வாசிப்பது தான் நல்லது. எதிர்காலம்ன்னு ஒண்ணு நம் கையில இருக்குல்ல, அப்ப கவர்ச்சியில் கைவரிசையை காட்டலாம்...' என்று சொல்லி, கண்ணடிக்கிறார். அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்த்தது போல்!
— எலீசா
பிரபுதேவாவுக்கு, அதிர்ச்சி கொடுக்கும் இயக்குனர்கள்!
முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுதேவா, ஒரு கட்டத்தில், இயக்குனர் அவதாரம் எடுத்தார். பாலிவுட்டிலும் கலக்கு கலக்கினார். தற்போது கோலிவுட்டுக்கு திரும்பி, சில படங்களில் நடித்து வருகிறார். முன்பெல்லாம் பிரபுதேவா படம் என்றாலே, கண்டிப்பாக இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுப்பர், இயக்குனர்கள். ஆனால், அவரை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, பாடல் காட்சிகளில் நடனம் ஆடுவதற்கு இப்போது யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை. இதுபற்றி பிரபுதேவா கூறுகையில், 'என் படத்தில், ரசிகர்கள் எதிர்பார்ப்பது நடனம் தான். ஆனால், இப்போதைய இயக்குனர்கள், நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு தர மறுக்கின்றனர். அதனால், இயக்குனர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, என் பாணியையும் மாற்றி விட்டேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* சிரஞ்சீவியுடன், சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்த, தமன்னா, மீண்டும் அவர் நடிக்கும், போலா சங்கர் என்ற படத்திலும் இணைந்துள்ளார். இப்படம் தமிழில், அஜீத் நடித்த, வேதாளம் படத்தின், தெலுங்கு, 'ரீ - மேக்' ஆகும்.
* சினிமா, சின்னத்திரை என்று தான், 'பிசி'யாக இருந்தபோதும், இளவட்ட நடிகர்கள், தாங்கள் நடித்த படத்தை பார்க்க அழைத்தால், தவறாமல் செல்கிறார், கமல். மேலும், அந்த படத்தில் தன்னை கவர்ந்த விஷயங்களை சொல்லி, 'பாசிட்டிவ்' ஆன செய்திகளையும் வெளியிடுகிறார்.
அவ்ளோதான்!