சாலையில் அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ஓடக்கூடிய டிராம் வண்டி, இன்று நம் நாட்டில் கோல்கட்டாவில் மட்டும் தான் காண முடியும். 1873ல், ரிப்பன் பிரபுவால் கோல்கட்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கத் தொடங்கியது. பிறகு படிப்படியாக சென்னை, மும்பை, பரோடா, நாசிக், கான்பூர் மற்றும் பாவ்நகர் ஆகிய இடங்களிலும் டிராம்கள் ஓடத் தொடங்கின.
முதன்முதலாக மின்சாரத்தில் இயங்கும் டிராம், சென்னையில் தான் இயக்கப்பட்டது. ஆரம்பத்தில் குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டபோது, மணிக்கு 3 கி.மீ., வேகத்தில் தான் சென்றது.
நாளடைவில் நாடு முழுதும் டிராம் நிறுத்தப்பட்ட போதும், இன்று வரை கோல்கட்டாவில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. டிராம் வண்டியில் பயணம் செய்ய விரும்புவோர், கோல்கட்டா சென்று வாருங்கள்.
— ஜோல்னாபையன்