கடந்த, 1860ல் வெள்ளையர் ஒருவர் எடுத்த புகைப்படம் தான், கேரளாவில் முதன் முதலில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இதில் இருப்பவர் யார் தெரியுமா? திருவாங்கூர் மன்னன் ஆயில்யம் திருநாள் மகாராஜா. உடன் இருப்பவர் மகாராணி.
இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கு, 2001 பொற்காசுகளும், 400 குவின்டால் மிளகும் சன்மானமாக வழங்கப்பட்டது.
புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் பயப்பட்டபோது, துணிந்து போஸ் கொடுத்து, சரித்திரத்தில் இடம் பிடித்தார், மகாராஜா.
— ஜோல்னாபையன்