'வியு டெலிவிஷன்ஸ்' நிறுவனம், இந்தியாவில் அதற்கான பிரத்யேகமான ஆன்லைன் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது. இதுநாள்வரை, பிற மின்னணு வர்த்தக நிறுவனங்களின் தளங்கள் வாயிலாக வர்த்தகத்தை மேற்கொண்டு வந்த இந்நிறுவனம், இப்போது, சொந்தமாக ஆன்லைன் ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆன்லைன் ஸ்டோரில் முதல்கட்டமாக, இந்நிறுவனத்தின் இரண்டு மாடல் டிவிகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. 'வியு பிரீமியம் 4கே டிவி 43 அங்குலம்' மற்றும், 'வியு பிரீமியம் முழு எச்.டி., 43 அங்குலம்' என, இரு டிவி மாடல்கள் விற்பனைக்கு உள்ளன.
ஆன்லைன் ஸ்டோர் துவங்கப்பட்டாலும், பிற மின்னணு வர்த்தக தளங்களிலும் விற்பனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பல மாடல்கள் ஆன்லைன் ஸ்டோரில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை:
வியு பிரீமியம் 4கே டிவி 43 அங்குலம்: 24,999 ரூபாய்.
வியு பிரீமியம் முழு எச்.டி., 43 அங்குலம்: 19,999 ரூபாய்.