'ஸ்... அப்பப்பா... பல்லு கூசுதே!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
00:00

பற்களின் வெளிப்புற படலமான 'எனாமல்' தேய்வதால், குளிர்ச்சியான மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் போது பல் கூச்சம் ஏற்படுகிறது. எனாமலில் நரம்புகளோ, ரத்த ஓட்டமோ கிடையாது. இது, பற்களின் உள்பகுதியில் பழத்தின் சதை போல, கூழ் போன்ற மென்மையான பகுதியை பாதுகாப்பாக மூடியிருக்கும் டென்டினைச் சுற்றி பாதுகாப்பு படலமாக இயங்குகிறது. ஒரு முறை எனாமல் தேய்ந்து விட்டால் மறுபடியும் உருவாகாது. இது தேய்வதால், டென்டின் வெளிப்படும் போது பல் கூச்சம் ஏற்படுகிறது.

கடின வகை பிரஷ் கொண்டு தவறான முறையில் அழுத்தி பற்களைத் தேய்ப்பதால், பல் கூச்சம் ஏற்படலாம். இத்தகையவர்கள் சரியான பிரஷ் செய்யும் முறையை தெரிந்து, பற்களை தேய்க்க வேண்டும். மேலும் கூடுதல் மென்மையான பிரஷை உபயோகிக்க வேண்டும். அமிலம் நிறைந்த பழங்கள், குளிர்பானங்களை அடிக்கடி பருகுவதால், அமிலத்தில் கரையும் தன்மை உடையதாக எனாமல் இருப்பதால், பல் கூச்சம் ஏற்படலாம். எனவே, அமிலத் தன்மை உள்ள சோடா, குளிர்பானங்கள், எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பால், சீஸ், நார்ச்சத்து மிகுந்த பழங்கள் சாப்பிடலாம்.

'ஸ்ட்ரா' பயன்படுத்தினால், பற்களில் அமிலம் படாமல் குடிக்க உதவும். அமிலத் தன்மையுடைய பொருட்களை சாப்பிட்டவுடன் பிரஷ் செய்யாமல், ஒரு மணி நேரம் கழித்து பிரஷ் செய்ய வேண்டும். ஈறுகளில் ஏற்படும் தொற்றின் காரணமாகவோ, ஈறு தொடர்பான வேறு கோளாறுகளின் காரணமாகவோ கூட பல் கூச்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இரவு நேரங்களில் பற்களைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இதற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம். இதை சரி செய்தால், பற்களைக் கடிக்கும் பழக்கம் நின்று விடும். பல் கூச்சம் துவக்க நிலையில் உள்ளவர்கள், பல் மருத்துவரை அணுகினால், பல் கூச்சத்திற்கான பிரத்யேக பற்பசையை பரிந்துரைப்பர். பல் தேய்மானமானது, குழி போலத் தேய்ந்திருந்தால், அதை மருத்துவரிடம் காட்டி அடைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவற்றை அலட்சியமாக விட்டால், ஆழமாகச் சென்று பற்கூழை அடைந்து, அதனால் வலி ஏற்பட்டால், வேர் சிகிச்சை ஒன்று தான் தீர்வாக இருக்கும். இது தவிர, அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு பல் கூச்சம் ஏற்படலாம். இவர்கள் பொது மருத்துவரிடம் அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.

டாக்டர் ஆர்.வி.அபராஜிதா,
வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்,
கல்பாக்கம்.
97919 06962
drrvaparajitha@gmail.com

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
05-டிச-202119:08:47 IST Report Abuse
DVRR மிக மிக எளிது Colgate Charcoal.உபயோகித்தால் மேலே உள்ளது போல் பல் கூசும் ....Dabur Red Tooth பேஸ்ட் உபயோகித்தால் அது அடங்கிவிடும் உடனே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X