மாரடைப்பு, இதய செயலிழப்பால், இளம் வயதினர் பாதிக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இயற்கையாக கிடைக்கும் மாதுளை சாறை, 200 மில்லி வீதம், தினமும் இரண்டு வேளை பருகுவதால், இதய செயலிழப்பைத் தடுக்க முடியும்.
'கிரீன் டீ' உட்பட வேறு எதையும் விட மூன்று மடங்கு அதிக 'ஆன்டி ஆக்சிடென்ட்' மாதுளையில் உள்ளது. அதிலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பாலி பினோல் வகையைச் சார்ந்தது. இது, கெட்ட கொழுப்பைக் குறைக்கவல்லது.
இதயத்தின் ரத்த நாளத்தில் தொற்று ஏற்படுவதால், ரத்த நாளம் இறுகி கடினமாவதை தடுக்கும் தன்மை மாதுளை சாறுக்கு இயற்கையாகவே உள்ளது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வருவது குறைவு.
- டெக்னியான் இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி