கேரள மாநிலம், கொல்லம் கொட்டாரகராவில், 'குதிரை வீராங்கனைகள் வீடு எங்குள்ளது?' என்று கேட்டால், சின்ன குழந்தை கூட வழி காட்டும். அம்மு மற்றும் அச்சு என்ற இரு இளம் பெண்கள், குதிரை சவாரியில் சாதனை படைத்து வருகின்றனர்.
இவர்களிடம் பல குதிரைகள் உள்ளன. குதிரை ஓட்டுவதில் திறமை காட்டி அனைவரையும் வியக்க வைக்கின்றனர். கடிவாளம் இன்றி, குதிரையை மிக வேகமாக ஓட்டும் சகோதரிகள் இருவரும், 20க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
— ஜோல்னாபையன்