'பிரிஜ்'ஜின் உள்ளே இருக்கும், 'பிரீசரில்' ஐஸ் கட்டிகள் படிவதை தடுக்க, சிறிதளவு உப்பை துாவி வைக்கலாம்
* கதவிடுக்குகளில் சிறிதளவு, 'டால்கம் பவுடரை' துாவி வைத்தால், கதவு சத்தம் எழுப்புவதை தவிர்க்கும்
* ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதனுள் இரண்டு கற்பூர வில்லைகளை போட்டு, நீங்கள் படுக்கும் இடத்திற்கு அருகிலோ அல்லது கட்டிலின் அடியிலோ வைத்து விடுங்கள். கொசுவர்த்திக்கு கூட பயப்படாத கொசுக்கள் ஓடிப்போய் விடும்
* புதிதாக, 'பெயின்ட்' அடித்த அறையினுள், ஒரு பக்கெட் தண்ணீரை இரவு முழுவதும் வைக்கலாம் அல்லது வெங்காயத்தை நறுக்கி வைத்தால், 'பெயின்ட்' வாசனை நீங்கும்.