தமிழகம்
ஜன.5: தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை.
* புதிய பார்லிமென்ட் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி.
ஜன.13: தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார் உட்பட 7 இடங்களில் அகழாய்வை தொடர மத்திய அரசு ஒப்புதல்.
ஜன. 14: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்., எம்.பி., ராகுல் நேரில் பார்த்தார்.
ஜன. 16: மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கினர்.
ஜன. 16: கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி துவக்கினார்.
ஜன. 18: 'நீட்' தேர்வு மதிப்பெண் மோசடி வழக்கில் பரமக்குடி மாணவி தீக் ஷா கைது.
ஜன. 19: டில்லியில் பிரதமர் மோடி- தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு.
ஜன. 21: இலங்கை கப்பல்படை தாக்கியதில் புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் பலி.
ஜன. 22: ஓசூரில் முத்துாட் நிறுவனத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரூ. 90 ஆயிரம் கொள்ளை. அடுத்த நாளே ரூ. 10 கோடி மதிப்பு தங்க நகை மீட்பு. 7 பேர் கைது.
ஜன.26: கொரோனா அச்சுறுத்தலால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து. குடியரசு தினத்தில் 1966க்கு பின் சிறப்பு விருந்தினர் பங்கேற்கவில்லை.
ஜன. 27: சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா விடுதலை.
இந்தியா
ஜன. 2: கொரோனா தடுப்பூசி 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி.
ஜன. 6: சட்னியில் விஷம் கலந்து தன்னை கொல்ல சதி நடந்ததாக 'இஸ்ரோ' விஞ்ஞானி தபன் மிஸ்ரா புகார்.
ஜன. 7: தெலுங்கானா உயர்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி பதவியேற்பு.
ஜன. 12 : மூன்று வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.
வான் வருவான்: ஜன. 13: விமானப்படையை பலப்படுத்த உள்நாட்டில் தயாரான 'தேஜஸ் எம்.கே.1' போர் விமானங்களை ரூ. 48 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
ஜன. 13: காஷ்மீரின் கதுவா எல்லையில் பாக்., பயங்கரவாதிகள் அமைத்த 492 அடி நீள சுரங்கப்பாதையை இந்திய ராணுவம் அழித்தது.
ஜன. 15: டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டும் பணி துவக்கம்.
ஜன.16: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு, கோவாக்சின்) திட்டத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கினார்.
ஜன.17: குஜராத்தின் கேவாடியாடிவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் உயரமான சிலை (560 அடி). சென்னை உட்பட ஏழு நகரங்களில் இருந்து ரயிலில் நேரடியாக இங்கு செல்லலாம்.
ஜன. 21: கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனேயின் சீரம் நிறுவனத்தில் தீ. 5 பேர் பலி.
ஜன.24: தேசிய பெண் குழந்தை தினத்தில் ஒருநாள் முதல்வராக உத்தரகாண்ட் கல்லுாரி மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி பணியாற்றினார்
ஜன. 26: டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில்வன்முறை.
நீங்கா நினைவில்...: ஜன. 27: சென்னை மெரினா கடற்கரையில் 'பீனிக்ஸ்' பறவை வடிவிலான ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.
ஜன. 29: டில்லியில் உள்ள இஸ்ரேல் துாதரகம் அருகே குண்டு வெடித்தது.
உலகம்
ஜன.6: இந்தியாவுக்கான பிரிட்டன் துாதராக அலெக்சாண்டர் எலிஸ் நியமனம்.
எல்லை மீறலாமா...: ஜன. 7: தேர்தல் தோல்வியை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் பார்லி., கட்டடத்தில் (கேப்பிடோல்) நடத்திய கலவரத்தில் 4 பேர் பலி.
நீளமான ரயில்: ஜன. 7: ஹரியானாவின் நியூ அடெலி - ராஜஸ்தானின் நியூ கிஷன்கர் இடையே உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக மின்சார ரயில் சேவை துவக்கம். நீளம் 1.5 கி.மீ.,
ஜன. 8: அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த வனிதா நியமனம்.
ஜன. 8: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லக் ஷர்-இ -தொய்பாவின் ஜகியுர் ரகுமானுக்கு பாக்., நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஜன. 13: பாலியல் குற்றத்துக்காக துருக்கியை சேர்ந்த மத வழிபாட்டு தலைவர் அட்னான் அக்தார்க்கு 1075 ஆண்டுகள் சிறை.
ஜன.14: வன்முறையை துாண்டும் விதத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்.
ஜன. 15: இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவில் நிலநடுக்கத்தில் 42 பேர் பலி.
ஜன. 18: லஞ்ச வழக்கில் தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத்தலைவர் லி ஜே யாங்கிற்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை.
பைடன் ஜோர்: ஜன. 20: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு. வயதான (78) அதிபர், அதிக ஓட்டு வித்தியாசத்தில் (8.12 கோடி) வென்றவர் இவர்.
ஜன.20: அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு.
ஜன.22: அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கும் விதமாக ஐ.நா., வின் அணு ஆயுத தடைச் சட்டம் அமல். இதில் 61 நாடுகள் கையெழுத்து. இந்தியா இல்லை.
ஜன. 23: பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கிய இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு.
ஜன.25: போர்ச்சுக்கல் அதிபராக டிசோசா மீண்டும் பதவியேற்பு.
ஜன.26: ஈஸ்டானியாவின் முதல் பெண் அதிபராக கஜா கலாஸ் பதவியேற்பு.
ஜன.26: அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக ஜெனட் ஏலென் நியமனம்.
ஜன.27: இந்தியா இலவசமாக கொடுத்த 'கோவிஷீல்டு' தடுப்பூசி மியான்மரில் பயன்பாட்டுக்கு வந்தது.
டாப் - 4
* ஜன. 9: இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் விமான விபத்தில் 62 பேர் பலி.
* ஜன. 19: பத்து, பிளஸ் 2 மாணவருக்கு 10 மாதங்களுக்கு பின் பள்ளி திறப்பு.
* ஜன. 25: மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்.
* ஜன. 29: பாக்., சிந்து மாகாணத்தில் 129 ஆண்டு சிவன் கோயில் மீண்டும் திறப்பு.