ஆகஸ்ட் - செப்டம்பர் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
ஆகஸ்ட் - செப்டம்பர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
00:00

தமிழகம்
ஆக. 2: தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு.
ஆக. 9: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடி என நிதியமைச்சர் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியீடு.
ஆக. 13: தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்.
ஆக. 14: தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்.
புதிய கவர்னர்: செப். 18: தமிழக கவர்னராக பீஹாரை சேர்ந்த ஆர்.என்.ரவி பதவியேற்பு. மத்திய உளவுத்துறை சிறப்பு இயக்குநராக இருந்தவர்.
ஆக. 24: தாம்பரம், காஞ்சி புரம், கடலுார், கும்பகோணம், கரூர், சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு.
* ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்.
ஆக. 26: இன்ஜினியரிங் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
செப். 2: ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
செப். 10: பாரதியார் நினைவு தினம்(செப்.11) 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும் என அரசு அறிவிப்பு.
செப். 12: தமிழகத்தில் ஒரே நாளில் 28.9 லட்சம் கொரோனா தடுப்பூசி 'டோஸ்' செலுத்தி சாதனை.
செப். 12: குஜராத் முதல்வராக புபேந்திர படேல் (பா.ஜ.,) பதவியேற்பு.
செப். 13: அரசு பணியில் பெண்கள் இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு.
செப். 20: பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (காங்.,) பதவியேற்பு.

இந்தியா
சாதனை சாலை:ஆக. 4: கிழக்கு லடாக்கில் உள்ள உலகின் உயரமான (19,300 அடி) உம்லிங்லா கணவாய் பகுதியில் சாலை அமைத்து இந்தியா சாதனை.
ஆக. 4: உள்நாட்டில் தயாரான முதல் விமானம் தாங்கி போர் கப்பல் 'ஐ.என்.எஸ். விக்ராந்த்' சோதனை ஓட்டம் வெற்றி.
ஆக. 7: அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி.
ஆக. 11: ஓ.பி.சி., பட்டியலில் இடம் பெறும் ஜாதிகளை முடிவு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம்.
உலக சாதனை: செப். 17: இந்தியாவில் ஒரே நாளில் 2.50 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி உலக சாதனை. சீனா 2.47 கோடி தடுப்பூசி செலுத்தி இருந்தது.
ஆக. 18: தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வு எழுத பெண்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
ஆக. 22: நாட்டின் பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்(25 மெகாவாட்) விசாகபட்டினத்தில் துவக்கம்.
ஆக. 23 : டில்லியில் காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் திறப்பு.
ஆக. 24: மஹராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதுாறாக பேசிய வழக்கில் மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது.
ஆக. 27: தமிழகத்தின் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக பதவியேற்பு.
ஆக. 29: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'விக்ரஹா' ரோந்து கப்பல் கடலோர காவல்படையில் சேர்ப்பு. நீளம் 321 அடி. 11 கடற்படை அதிகாரி, 110 மாலுமி பணியாற்றலாம்.
நீதி காக்க...: ஆக. 31: முதன்முறையாக ஒரே நேரத்தில் ஒன்பது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு. இதில் 3 பேர் பெண்கள்.
செப். 1: 'ஹரே கிருஷ்ணா இயக்க(இஸ்கான்) நிறுவனர் ஸ்ரீல பக்தி வேதாந்தா சுவாமி நினைவாக ரூ. 125 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
செப். 9: 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்பு.
செப். 11: காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
செப். 16: நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங் களுக்கான, 'பி.எச்., பதிவெண்' முறை நடைமுறைக்கு வந்தது.
செப். 23: 'பி.எம்., கேர்ஸ்' அறக்கட்டளையின் நிதி, மத்திய அரசின் நிதி அல்ல என டில்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.
* இந்திய விமானப்படை தலைமை தளபதியாக வி.ஆர்.சவுத்ரி நியமனம்.
செப். 27: சுகாதார அட்டைக்கான 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்.
செப். 28: பஞ்சாப் காங்., தலைவர் சித்து ராஜினாமா.

உலகம்
ஆக. 3: அமெரிக்க பல்கலை நடத்திய சிறந்த அறிவாற்றல் தேர்வில் இந்திய வம்சாவளி மாணவி நடாஷா பெரி 11, வெற்றி.
* அர்மேனியா அதிபராக நிகோல் பஷின்யான் பதவியேற்பு.
ஆக. 15: அமெரிக்க படை வெளியேறியதை தொடர்ந்து ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது.
* காபூலில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க படையின் சரக்கு விமானத்தில் 640 பேர் நெரிசலுடன் தப்பினர்.
ஆக. 21: மலேசிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்பு.
ஆக. 26: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் வெளியே குண்டு வெடித்ததில் 85 பேர் பலி.
* உலகில் முதல் முறையாக 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் கியூபாவில் துவக்கம்.
செப். 15: காற்றில் இருந்து ஆண்டுக்கு 400 டன் கார்பனை உறிஞ்சும் உலகின் பெரிய ஆலை ஐஸ்லாந்தில் திறப்பு.
செப். 20: ரஷ்யாவின் பெர்ம் மருத்துவ பல்கலை துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர் பலி.
செப். 22: கனடா பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி.
* உலகின் வயதான இரட்டை சகோதரிகளாக ஜப்பானின் யுமினோ சுமியாமா, கொவ்மி கொடமா (107 வயது) கின்னஸ் சாதனை.
முதன்முறை: செப். 24: வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி-- அமெரிக்க அதிபர் பைடன் முதன்முறையாக சந்திப்பு.

டாப் - 4
ஆக. 14 : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டப்படி 54 பேருக்கு பணி நியமனம்.
ஆக. 15: சென்னையில் 75வது சுதந்திர தின நினைவுத்துாண் திறப்பு.
ஆக. 15: ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் பலி.
ஆக. 31: ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X