தென் இந்தியா மல்டி - ஸ்டேட் விவசாய கூட்டுறவு சங்க நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: அலுவலக உதவியாளர் 10, விற்பனையாளர் 22, சூப்பர்வைசர் 8, அக்கவுண்டன்ட் 4, கிளை மேலாளர் 4 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அலுவலக உதவியாளர், விற்பனையாளர் பிரிவுக்கு பிளஸ் 2, சூப்பர்வைசர் பதவிக்கு டிகிரி, அக்கவுண்டன்ட் பதவிக்கு பி.காம்., / எம்.காம்., கிளை மேலாளர் பதவிக்கு முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.1.2022 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள் : 28.2.2022 மாலை 4:30 மணி.
விபரங்களுக்கு : http://simcoagri.com/our-career.html