பருத்தி பயிரிட பல பருவம் இருந்த போதிலும் கோடை இறவையான பிப்ரவரி, மார்ச் சாகுபடிக்கு ஏற்ற பருவம். விதைகளை விதைப்பதற்கு முன்பாக விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெற முடியும்.
பஞ்சு நீக்கிய பருத்தி விதை ஒரு கிலோவிற்கு இரண்டு கிராம் ட்ரைகோடர்மா விரிடி கலந்த உடன் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான பஞ்சு நீக்கிய பருத்தி உடன் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா தலா 50 மில்லி அல்லது அசோஸ்பாஸ் 50 மில்லி உடன் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். ஒரு சதவீ புங்க இலைச்சாறில் அதே அளவு விதைகளை ஊற வைத்து கடினப்படுத்தியும் விதைக்கலாம்.
விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு கிலோ பஞ்சு நீக்கிய பருத்தி விதைக்கு அரப்பு இலை 100 கிராம், டி.ஏ.பி 40 கிராம், நுண்ணூட்டக் கலவை 15 கிராம், அசோஸ்பைரில்லம் 200கிராம் எடுத்து கொள்ள வேண்டும். 300 மில்லி மைதாவுடன் ஒரு பசை கலந்து அனைத்தையும் கலந்து விதை முலாம் தயார் செய்து விதைக்கலாம்.
வித்தின்றி விளைவில்லை என்பது பழமொழி ஒரே சீரான வளர்ச்சியுடைய செடிகளைப் பெற தரமான பருத்தி விதைகளையே பயன்படுத்த வேண்டும். இதற்கு வீரிய விதையின் முளைப்புதிறன் 75 சதவீதம், ரக பருத்திக்கு 65சதவீதத்துடன் 98 சதவீத சுத்த தன்மை, 10 சதவீத ஈரப்பதம் இருக்க வேண்டும். பருத்தி விதைகளை விதைப்பதற்கு முன் ரூ.30 கட்டணம் செலுத்தி விதைப் பரிசோதனை செய்தபின் விவசாயிகள் விதைத்தால் மகசூல் குறையாது.
மகாலட்சுமி
விதைப்பரிசோதனை அலுவலர்
கமலாராணி,வேளாண்மை
அலுவலர் விதைப்பரிசோதனை நிலையம்,
மதுரை
94873 48707