நாற்று ஆனார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
00:00

கடலுார் மாவட்டம், சிதம்பரம், நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!
தமிழாசிரியர் சம்பத், தமிழ் மொழி மீதிருந்த அதீத பற்றால் பெயரை, செல்வம் என மாற்றியிருந்தார். மொழி கற்கும் ஆர்வத்தைத் துாண்ட, தமிழ் ஆண்டுகளின் பெயரை, மனப்பாடம் செய்ய சொன்னார். அதன்படி தமிழ் ஆண்டுகள், எளிதாக மனப்பாடமாகிவிட்டது.
ஒரு நாள், 'நாத்தனார்' என்ற உறவை குறிக்கும் பெயர் சொல் பற்றி வகுப்பில் விவாதம் வந்தது. அதை நயமுடன், 'நாற்று போன்றவள் பெண்; அதாவது, ஓரிடத்தில் வளரும் நெல் நாற்றை, மற்றொரு இடத்துக்கு மாற்றி நட்டால் தான், பயிர் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சல் தரும்...
'அதுபோல், மணம் முடித்து பிறந்த இடத்திலிருந்து, புகுந்த வீடு செல்லும் பெண்ணை, 'நாற்று ஆனார்' என அழைத்தனர். அது மருவி, 'நாத்தனார்' என இப்போது கூறுகின்றனர்...' என, விளக்கம் அளித்தார் ஆசிரியர்.
வியப்புடன் கவனித்து நினைவில் கொண்டேன். அதன்பின், இது போல் சுவாரசியங்கள் குறித்து தேட ஆரம்பித்தது மனம்.
தற்போது, என் வயது, 54; ஒரு சொல்லின் உண்மை பொருளை இயல்பாக விளக்கிய அந்த ஆசிரியரை எண்ணும் போதெல்லாம், மனம் துள்ளுகிறது!
- கவுரி ராமலிங்கம், சிதம்பரம்.
தொடர்புக்கு: 75984 55457

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X