குடியரசு தினம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
00:00

போராட்டம் மற்றும் உயிர் தியாகங்கள் மூலம், ஆங்கிலேயரை பணிய வைத்து, ஆகஸ்ட் 15, 1947ல், சுதந்திரம் பெற்றனர், நம் தலைவர்கள். அதன் நினைவாக, சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுபோல், ஜனவரி 26ல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்...
குடியரசு என்றால், 'மக்களாட்சி' என்று பொருள். சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல அமைப்புகள் இணைந்து, ஜனவரி 1930-ல் பாகிஸ்தான் பகுதியில் உள்ள லாகூரில் மாநாடு நடத்தின. மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார் ஜவஹர்லால் நேரு. காந்தியடிகள் தலைமை தாங்கினார். அதில், 'பூர்ண சுவராஜ்' பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதன் பொருள், முழுமையான சுதந்திரம் பெறுவதே நோக்கம் என்பதாகும்.
அதை செயல்படுத்தும் விதமாக, ஒரு வேண்டுகோள் விடுத்தார் காந்தியடிகள். அதில், ஆண்டு தோறும், ஜனவரி 26ம் நாளை சுதந்திர தினமாக கடைபிடித்து, ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கேட்டுக் கொண்டார்; அதன்படியே கடைபிடிக்கப்பட்டது.
முறையான சுதந்திரம், 1947ல் பெற்றபின், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவை உருவாக்கியது. ஜவஹர்லால் நேருவை பிரதமராக கொண்ட முதல் நாடாளுமன்றம், இந்த வரைவு குறித்து, இரண்டு ஆண்டுகள் விவாதம் நடத்தியது. இறுதியாக, ஜனவரி 24, 1950ல் அரசியல் அமைப்பு சட்ட வரைவு, திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கையால் எழுதிய அரசியல் அமைப்பு சட்டப் புத்தகம் உருவாக்கப்பட்டது. அது, அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. இதை, மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட முடிவு செய்தார் நேரு.
ஏற்கனவே, காந்தியடிகள் சுதந்திர தினமாக அறிவித்திருந்த, ஜனவரி 26-ம் நாளையே, மக்களாட்சி மலர்ந்த நாளாக, அதாவது குடியரசு தினமாக அறிவித்தார். அதை கொண்டாடுவதற்கு உரிய நடைமுறையும் உருவாக்கப்பட்டது.

அந்த முறைப்படி குடியரசு தினத்தன்று...
* சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு, புதுடில்லி இந்தியா கேட் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்த வேண்டும்
* சிறப்பு விருந்தினருடன் முப்படை அணிவகுப்பை ஏற்று, சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்க வேண்டும்
* அயல்நாட்டு சிறப்பு விருந்தினர் ஒருவரை விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும். அதன்படி, முதல் குடியரசு தின விழாவில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய அதிபராக இருந்த சுகர்னோ பங்கேற்றார்.
இந்த அடிப்படையில் தான், இன்றும் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.
இந்திய சட்ட நடைமுறைகளை முறையாக கடைபிடித்து, மக்களாட்சியை வலுவாக்குவோம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X