ஆசைப் படகு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
00:00

கடற்கரையில் இருந்தது கருக்கன்பட்டி கிராமம். அங்கு பெற்றோருடன் வசித்து வந்தான், ஸ்டீபன்; நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்தான்; படுச்சுட்டி!
அம்மாவின் பேச்சை கேட்காமல், கடற்கரையில் கட்டி போட்டிருந்த, அப்பாவின் படகை அவிழ்த்து, துடுப்பு போட்டு கடலுக்கு சென்றான்.
வழக்கத்துக்கு மாறாக, பெரும் அலை வீசியது.
களைப்பால் துடுப்பை சரியாக போட முடியவில்லை; அங்குமிங்கும் ஆடி கவிழ்ந்தது படகு; தத்தளித்தான் ஸ்டீபன். 'பெற்றோர் பேச்சை கேளாமல் வந்தது மிகப் பெரிய தவறு' என உணர்ந்தான்.
அவனை காப்பாற்ற யாரும் இல்லை.பயந்து நடுங்கினான்.
எதிர்பாராமல் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
மிகப்பெரிய மீன் ஒன்று, அவன் அருகில் வந்து, 'என் மீது ஏறிக்கொள்...' என்றது. உயிர் பிழைக்க ஏறிக் கொண்டான் ஸ்டீபன்.
'நீச்சல் தெரியாமல் கடலுக்குள் வந்தது பெரிய தவறு... உயிர் காக்கும் கவசம், அணியாமல் வந்திருக்கிறாய்; கடலுக்குள் படகை இயக்கும் வயசும் இன்னும் வரவில்லை...' என்றது மீன்.
'தவறு தான்... இனி இப்படி செய்ய மாட்டேன். கடல் அன்னை, உயிரை காப்பாற்றுவாளே தவிர, எடுக்க மாட்டாள்...' என நம்பிக்கையுடன் சொன்னான் ஸ்டீபன்.
'உன் அதீத நம்பிக்கையை பாராட்டுகிறேன்; நான் மீன் அல்ல; மீன் உருவத்தில் உன்னை காக்க வந்த கடல் அன்னை...' என்றது.
பேரானந்தம் அடைந்தான்.
'உயிரை காத்ததற்கு நன்றி...' என கண்ணீர் விட்டான் ஸ்டீபன்.
'பெற்றோர் சொற்படி நடக்க வேண்டும்...' என அறிவுரைத்தது கடல் அன்னை.
'கட்டாயம் கடைபிடிப்பேன்...'
அவனை சுமந்தபடி நீந்தியது மீன்.
கரையோரம் பெற்றோர் அழுத கண்களோடு காத்திருந்தனர். அவனை கரையில் விட்டு சென்றது மீன்.
அந்த சம்பவத்தை கதை போல கூறினான் ஸ்டீபன்; சிலர் நம்பினர், பலர் நம்ப மறுத்தனர்.
வீட்டிற்கு வந்ததும், கடலம்மா கூறியதை யோசித்தான்.
பின், பெற்றோர் சொல் கேட்டு அதன்படி நடந்தான் ஸ்டீபன்.
குழந்தைகளே... மூத்தோர் சொல் கேளாமல், வயது, சக்திக்கு மீறி எதையும் செய்ய கூடாது.

- எஸ்.டேனியல் ஜூலியட்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X