என் வயது, 51; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன்; அதற்கு நிகராக ஏதுமில்லை.
வாரந்தோறும் படிக்கும் நீதிக்கதைகளை, என் வகுப்பில் கூறுவேன். குழந்தைகள் மிக ஆர்வத்தோடு கேட்பர். இதையறிந்து பெற்றோரும் என்னைப் பாராட்டியுள்ளனர்.
என் அறிவுரையால், சிறுவர்மலர் படிக்க துவங்கியதாக, பல பெற்றோர் கூறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுலா செல்லும் போது, உடன் சிறுவர்மலர் இதழையும் எடுத்துச் சென்று கதைகள் சொல்வேன். ஆன்லைன் வகுப்பிலும் விடாமல் கதைகளை கூறிவருகிறேன்; பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
உடன் பணிபுரியும் ஆசிரியர்களிடம், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி கட்டுரைகளை கூறி மன அழுத்தத்தை போக்குவேன். பதின்பருவத்தினருக்கு, 'இளஸ்... மனஸ்...' பகுதி அறிவுரை மிகவும் பயன்படுகின்றன.
தவறாமல், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' சமையல் குறிப்புபடி உணவு தயாரித்து பகிர்ந்து மகிழ்வோம். பெரியோரையும் கவரும் சிறுவர்மலர் இதழுக்கு, இதயம் கனிந்த பாராட்டுகள்!
- சவுமியா சுப்ரமணியன், சென்னை.
தொடர்புக்கு: 99404 60969