இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2022
00:00

இப்படியும் செய்யலாமே!
தன் மகனின் பிறந்த நாளை, முதியோர் இல்லத்தில் கொண்டாட விரும்பினார், நண்பர். அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு, புத்தாடை மற்றும் அவர்கள் விரும்பும் உணவு வகைகளை வழங்கவும் எண்ணினார்.
ஒரு வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து, முதியோர் இல்லத்திற்கு குடும்பத்தோடு சென்றார். அதன் நிர்வாகியிடம் விபரத்தைக் கூறி, அனுமதி பெற்று, முதியோர்களை வாகனத்தில் ஏற்றி, நகரின் முன்னணி துணிக்கடைக்கு சென்றார்.
தங்களுக்குப் பிடித்தமான உடைகளை, அவர்களை தேர்வு செய்து கொள்ள கூறி, வாங்கிக் கொடுத்தார். பிறகு, பிரபலமான முதல் தர உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்து, சாப்பிடும்படி கூறினார்.
நிறைவாக, மீண்டும் முதியோர் இல்லத்திற்கு வந்து, தன் மகனின் பிறந்த நாளை, அவர்களோடு, 'கேக்' வெட்டி கொண்டாடினார். மனதில் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், முதியோர் அனைவரும், நண்பரின் மகனை மனதார வாழ்த்தினர்.
உடனிருந்து இவற்றை பார்த்த நான், ஆதரவற்றோரை விருந்தினர் போல நடத்தி, மனிதாபிமானத்தோடு செயல்பட்ட நண்பரை வாழ்த்தினேன்!
-எஸ்.விஜயன், கடலுார்.

பழைய துணிகள் என்றாலும்...
சமீபத்தில், திருப்பூருக்கு சென்றிருந்தேன். அங்கே சாலையின் மதில் சுவர் ஓரம், பழைய துணிகளை அடுக்கி வைத்திருந்தனர். சில துணிகள் நடைபாதையில் சிதறிக் கிடந்தன. அவற்றின் மீது சில தெரு நாய்கள் படுத்து துாங்கிக் கொண்டிருந்தன.
அது குறித்து, அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன்.
'எழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பழைய துணிகளை இங்கே கொண்டு வந்து வைப்பர். தேவைப்படுவோர், அதை எடுத்துக் கொள்ளலாம்...' என்றார்.
சேவை எண்ணம் சிறந்தது தான். அதேசமயம், எந்த பாதுகாப்பும் இன்றி, இப்படி துணிகளை வைப்பது தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவைகள் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படும். மேலும், நாய், மாடு போன்றவை அதில் படுத்து துாங்குவதற்கு வசதியாகி விடும்.
மாறாக, இந்த துணிகளை எல்லாம் நுால் நிலையம் அல்லது இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அட்டை பெட்டியிலோ அல்லது மர அலமாரிகளிலோ வைக்கலாம். இதனால், துணி வீணாவது தடுக்கப்படும்; தேவைப்படுவோர் எடுத்துச் சென்று பயன்படுத்துவர்.
என்ன நண்பர்களே... பழைய துணிகள் என்றாலும், அதை பாதுகாப்பான முறையில் தரலாமே; மற்றவர்களும் மனிதர்கள் தானே... சிந்தியுங்கள்!
அ.மீனாட்சி, கன்னியாகுமரி.

வரும் முன் காப்போம்!
'கொரோனா' இரண்டாம் அலையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. இத்தகைய துயர சம்பவங்கள், சில நேரங்களில் வேதனை தருவதாக இருந்தாலும், அவை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
இன்றும் பல மருத்துவமனைகளைச் சுற்றி கான்கிரீட் கட்டடங்கள் அதிகமாக உள்ளன. இதனால், தேவையான மரங்கள், செடிகள், தாவரங்கள் இல்லாததால், நோயாளிகள், செயற்கை முறையில் ஆக்சிஜனை பெறும் சூழ்நிலையே நிலவுகிறது.
இதை தவிர்க்க, அதிகம் ஆக்சிஜனை வெளியிடும் மரங்களான அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், வன்னி போன்றவைகளை மருத்துவமனையைச் சுற்றி நடலாம். அதன் மூலம் கிடைக்கும் இயற்கை ஆக்சிஜனைப் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் முன் வரவேண்டும்.
மரங்கள், நிலத்தடி நீரை மட்டும் சேமிப்பதோடு நிற்காமல், நம் உடலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அரணாக அமையும் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
- வி.எஸ்.கோபாலன், மதுரை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadavul - Nagpur,இந்தியா
24-ஜன-202210:23:57 IST Report Abuse
kadavul வீ.எஸ்.கோபாலன் அவர்களைப்போல் பலரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதை எதோ காற்றிலேயே பிராணவாயு குறைந்துவிட்டது போல் நினைக்கிறார்கள். அதை போக்க நிறைய மரம் வளர்க்க வேண்டும் என்றுவேறு மக்களுக்கு அறிவுரை தருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையின்போது சமூக ஊடகங்களில் இதுபோன்ற கருத்துகளும் மீம்ஸ் களும் நிறைய போட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் நினைப்பதுபோல் காற்றில் ஆக்ஸிஜன் குறைந்தால் நோயாளிகள் மட்டுமல்ல எல்லா உயிரினங்களும் மூச்சுத்திணறி அவஸ்தை பட வேண்டும். உண்மை என்னவென்றால் நோய் தோற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்படுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. அதனால்தான் சிலிண்டெர்மூலம் ஆக்ஸிஜன் கொடுத்து அவர்களின் உடலில் ப்ரணவாயுவின் அளவை நிலைப்படுத்துகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X