சில்லரை இல்லை என்றால், கல்லறையில் வாழவும் துணிந்து விடுவர், மனிதர்கள்.
ஆப்ரிக்க நாடான எகிப்து தலைநகர் கெய்ரோவில், கல்லறைகள் நிறைந்த ஊர் ஒன்று இருக்கிறது. இங்கு, பல நுாற்றாண்டுகள் பழமையான கல்லறைகள் மத்தியில் கட்டப்பட்ட வீடுகளில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்தால் கைக்கு எட்டும் தொலைவில் கல்லறைகளே காணப்படுகின்றன.
இப்பகுதியில் வாழும் குழந்தைகள் பேய், பிசாசுகள் என்றால் பயப்படுவதில்லை. மிகவும் பழமையான கல்லறைகளைக் காண, சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ஜோல்னாபையன்