தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், ஐந்து நிறங்களில் ஓடும் நதி, அனைவரையும் வியக்க வைக்கிறது. 'கானோ கிரிஸ்டல்' என்ற அழகிய நதி, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கறுப்பு நிறங்களில் ஓடுவதை காணலாம். மலையில் உருவாகி, 100 கி.மீ., துாரம் பயணிக்கிறது.
ஒரு காலத்தில், மிக கொடூரமான கொள்ளையர்கள் இந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்ததால், இதன் அழகை ரசிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கொள்ளையர்களுடன் கொலம்பியா அரசு செய்த சமரசத்தால், இன்று ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். நதிக்கரை ஓரம் இருக்கும் பாறைகளின் நிறங்கள் தான் தண்ணீரில் பிரதிபலித்து, வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
— ஜோல்னாபையன்