* தோசை, இட்லி, வடை மற்றும் போண்டா செய்ய உளுந்தை வெதுவெதுப்பான வெந்நீரில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்தால், மாவு மிக மிருதுவாக இருப்பதுடன், கூடுதலாகவும் கிடைக்கும்.
* அவலை நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். மோரில் தேவையான அளவு உப்பு மற்றும் வறுத்த அவலை சேர்க்கவும். இதில், சீரகம் சிறிது, கறிவேப்பிலை கிள்ளிபோட்டு, பெருங்காயம் கரைத்து ஊற்றி, கடுகு தாளித்து ஊற்றவும். இந்த அவல் பச்சடி, மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.
* உளுந்தை ஊற வைத்து, மாவை நைசாக அரைத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, வாணலியில், சூடான எண்ணெயில் போண்டாவாக பொரிக்கவும். குலோப் ஜாமூனுக்கு வைக்கும் சர்க்கரைப் பாகு போல் வைத்து, அதில் இந்த உளுந்து போண்டாக்களைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் ஊறியதும், கிண்ணங்களில் வைத்து பரிமாறுங்கள். 'ஆந்திரா ஸ்வீட் போண்டா' ஹோட்டலில் செய்வது போன்றே ருசியாக இருக்கும்.