இடது கை பழக்கம் கொண்டவர்கள், ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்துவதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்தும், இதுவரை பல நிறுவனங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், முதலடியை எடுத்து வைத்துள்ளது, சாம்சங். இந்நிறுவனம் வியர் ஓ.எஸ்., வாயிலாக இடதுகை பழக்கம் கொண்டவர்களின் பிரச்னையை தீர்க்க முன்வந்தது. இதையடுத்து கூகுள் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து, இடது கை பழக்கம் உடையவர்களும் எளிதாக பயன்படுத்தும் வகையிலான, வியர் ஓ.எஸ்., அப்டேட்டுகளை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஓ.எஸ்., வாயிலாக, ஸ்மார்ட் வாட்சை தலைகீழாகவோ அல்லது 180 டிகிரி அளவுக்கோ திருப்பிக் கொள்ளலாம்.
இடது கை பழக்கம் உடையவர்கள் ஸ்மார்ட்வாட்சுகளை அணியும்போது, அதன் பட்டன்கள் உடலை பார்க்க இருக்கும். அதனால் பயன்படுத்துவதில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இப்போது, புதிய அப்டேட் வாயிலாக, வாட்சின் முகப்பை தலைகீழாக திருப்பிக் கொள்ள முடியும் என்பதால், இனி இது போன்ற பிரச்னைகள் இருக்காது என்கின்றனர்.