'கோடாக்' நிறுவனம், ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ,ஆப்பிள் ஐபோன் 13 ஆகியவற்றுக்கு பொருந்தும் வகையிலான, 'மேக்னடிக் ஒயர்லெஸ் சார்ஜர்'களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஒன்று காரிலும்; மற்றொன்று வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டுமே 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் பவர் கொண்டதாகும். 'டபுள்யு.சி.எம்., 101 சி' எனும் சார்ஜர் கார்களுக்கானதாகும். இதை, ஏசி வென்ட்டில் எளிதாக பொருத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும். கீழே விழாத வகையில் லாக் வசதியும் உள்ளது. இந்த சார்ஜர் சதுர வடிவில் வந்துள்ளது.
இந்த சார்ஜரில் போனை 360 டிகிரி வரை சுழற்றலாம் என்பது கூடுதல் வசதி. வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்த ஏற்ற வகையில் 'டபுள்யு.சி.எம்., 201' எனும் சார்ஜர் அறிமுகம் ஆகியுள்ளது.
சார்ஜிங்கின் போது, இதில் உள்ள ஸ்டாண்டு வசதியை பயன்படுத்தி, போனை நீள்வாக்கில் பயன்படுத்த முடியும். விலையை பொறுத்தவரை, இரு மாடல்களின் விலையும் ஒன்று தான்.
அறிமுக விலை: 2,499 ரூபாய்.