பூனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2022
00:00

மனிதனுடன், 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் பழகி, கூடவே வாழ்ந்து வருகிறது பூனை. வளர்ப்பு பிராணிகளில் மிக பிரபலமானது. உலகில், 50 கோடிக்கும் அதிகமான பூனைகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. பூனை பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்...இதன் எடை, ஐந்து கிலோ வரை இருக்கும். அதிகபட்சம், 12 முதல் 15 வருடங்கள் வாழும். குறைந்த வெளிச்சத்திலும் திறனாக பார்க்க இயலும். மூக்குக்கு கீழே நேரடியாக பார்க்க இயலாது; இமை கிடையாது. மனிதனை விட கேட்கும் திறன் ஐந்து மடங்கு அதிகம். காதுகளை, 180 டிகிரி கோணத்தில் திருப்ப இயலும்.வாசனையையும் கூடுதலாக உணரும் சக்தி உண்டு. வண்ணங்களை வித்தியாசப்படுத்தி அறியும் திறன் குறைவு. உடலை சுத்தமாக பேண, அவ்வபோது நாக்கால் நக்கிக் கொள்ளும். தினமும், 14 மணி நேரம் வரை துாங்கும்.இதன் பற்கள் வளையும் தன்மை கொண்டவை. பிடித்தவற்றை கவ்வியபடி, எடுத்துச் செல்லும். முன்காலில் ஐந்து விரல், பின்காலில் நான்கு என, மொத்தம், 18 விரல்கள் இருக்கும். அபூர்வமாக காலுக்கு எட்டு வீதம், 32 விரல்களையும் சில பூனைகள் கொண்டிருக்கும். மணிக்கு, 48 கி.மீ., வேகத்தில் ஓடும் திறனுள்ளது. அதே வேகத்தில், குறைந்த துாரமே ஓட இயலும்.மனித உடலில், 206 எலும்புகள் உள்ளன; பூனைக்கு, 244 உள்ளன. பூனைக்கு ஏழு ஜென்மம் எனக் கூறுவர். உடனே, ஏழு முறை பிறக்கும் என எண்ண வேண்டாம். அது, எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் காயம் படாமல் தப்பிவிடும். இதைத் தான் ஏழு பிறவி எனக் கூறுகின்றனர்.-ராஜிராதா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X