'கூகுள்' நிறுவனத்தின், போல்டபிள் ஸ்மார்ட்போனான, 'பிக்ஸல் நோட்பேடு' குறித்து, பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசியத் துவங்கி உள்ளன.
இந்த பிக்ஸல் நோட்பேடு, இதற்கு முன் 'சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3' ஸ்மார்ட்போன் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வந்தது. இப்போது, 'ஒப்போ பைண்டு என்' எனும் போன் போல இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த போன் முதலில் அமெரிக்காவிலும், அதன் பின் பன்னாட்டு சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டு இறுதிக்குள்் அனைத்து சந்தைகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலையை பொறுத்தவரை, ௧ லட்சம் ரூபாயிலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.