ஏ. ஆர். ரஹ்மானின் புது முயற்சி!
மணிரத்னம் இயக்கியுள்ள, பொன்னியின் செல்வன் படத்தில், வந்தியத்தேவன், குதிரையில் வருவது போன்ற காட்சியில், 'ஓப்பனிங்' பாடல் ஒன்று இடம்பெறுகிறது. 195௭ல் வெளியான, நீலமலைத் திருடன் என்ற படத்தில் இடம்பெற்ற, 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்ற பாடல் வரிகளை இந்த பாடலிலும் பயன்படுத்தியிருக்கும், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை தன் குரலிலேயே பின்னணியும் பாடியிருக்கிறார். மேலும், பழமையான, புழக்கத்தில் அதிகம் இல்லாத பல இசைக்கருவிகளை தேடிப்பிடித்து, இந்த படத்தின் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா
அதிர விட்ட, ரம்யா பாண்டியன்!
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழ், மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ள, ரம்யா பாண்டியன், முன்பெல்லாம், 'ஊறுகாய் அளவு கவர்ச்சி...' என்று, இயக்குனர்கள் கேட்டாலே, 'செம காண்டாகி' விடுவார். இப்போது, 'எலுமிச்சை, நார்த்தங்காய் என, எந்த ஊறுகாய் போடவும் நான் தயார்...' என்று அசைவ பட இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
'மெகா ஹீரோகளுடன், 'டூயட்' பாட வைத்தால், சமந்தா, ரெஜினா போன்ற நடிகையரை எல்லாம் துாக்கி சாப்பிடும் நடிகையாகவும் நான் தயார்...' என்று அறைகூவல் விடுத்துள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த அதிரடி அறிவிப்பு, சில புது வரவு நடிகையரை, அதிர வைத்துள்ளது.
— எலீசா
நட்பை மதிக்கும், அமலாபால்!
எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தின், 'ஹீரோ'களுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டார், நடிகை அமலாபால். ஆனபோதும், அதை காரணம் காட்டி அந்த நடிகர்கள் உடனான நட்பை முறித்துக் கொள்ளவில்லை. இப்போது வரை, 'மாஜி ஹீரோ'கள் அனைவருடனும் நட்பு பாராட்டி வருகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டால், 'சினிமாவில், நடிகர்களுடன் இணைத்து கிசு கிசு வெளியாவது, சகஜமானது. அதற்கெல்லாம் பயந்து, உண்மையான நட்பை முறித்துக் கொண்டால், அந்த நட்புக்கே மரியாதை இல்லை. அதனால்தான், எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும், நட்பை, கற்பு போன்று பாதுகாத்து வருகிறேன்...' என்கிறார்.
— எலீசா
தயாரிப்பாளர்களை ஓட விடும், சமந்தா!
கணவரை விவாகரத்து செய்து, மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்தபோது, இனிமேல், சமந்தாவின் படக்கூலி தடாலடியாக இறங்கி விடும் என்று தான், அனைவரும் கருதினர். ஆனால், புஷ்பா படத்தில், 'அயிட்டம்' பாடலுக்கு அதிரடி நடனமாடி, ஒன்றரை கோடியை சொல்லி அடித்தார், சமந்தா.
அதோடு, புதிய படங்களுக்கு தன்னை ஒப்பந்தம் பண்ண வந்த தயாரிப்பாளர்களிடமும், 'ஒத்த பாட்டுக்கே ஒன்றரை கோடின்னா, ஒரு படம் முழுக்க நடிக்க எவ்வளவுன்னு நீங்களே கூட்டிக்கழிச்சி பார்த்துட்டு முடிவு சொல்லுங்க. கூடவே, ஹிந்தியிலும் இப்ப, 'என்ட்ரி' கொடுத்திருக்கிறேன்...' என்று, இன்னொரு, 'அட்ராசிட்டி'யும் காட்டுகிறார்.
இதனால், சமந்தாவின் சம்பளத்தை பாதியாக குறைத்து விடலாம் என்று நம்பி சென்ற தயாரிப்பாளர்கள், அவர் போட்டுத் தாக்குவதைப் பார்த்து, 'பெரிய சம்பளம் கொடுக்க வேண்டும் போலிருக்கே...' என்று, தெறித்து ஓடுகின்றனர்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* இந்தியன் - 2 படத்தில் நடித்து வந்த, நடிகர் விவேக் மரணம் அடைந்ததால், அந்த வேடத்தில் இப்போது, ஜோக்கர் மற்றும் ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்துள்ள, குரு சோமசுந்தரம் நடிக்கப் போகிறார்.
* கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என, சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ள, சிவகார்த்திகேயன், தற்போது, விஜய் நடித்துள்ள, பீஸ்ட் படத்திலும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்த பாடலை விஜயே பின்னணி பாடியுள்ளார்.
* விஜய்சேதுபதியுடன், கருப்பன் படத்தில் நடித்த, மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான, தன்யா ரவிச்சந்திரன், தற்போது, ஜெயம் ரவியின், 28வது படத்தில் அவருடன் இணைந்துள்ளார்.
* கார்த்தி தமிழில் நடித்த, கைதி படத்தின், ஹிந்தி, 'ரீ - மேக்'கில், அஜய்தேவ்கன் நடிக்கிறார். இப்படத்தில் கடவுள் பக்தி கொண்ட வேடத்தில் நடிப்பதால், அய்யப்பனுக்கு மாலை போட்டு சபரிமலைக்கு சென்று திரும்பிய பிறகு, அதே பக்தி பரவசத்துடன் நடிக்கத் துவங்கியுள்ளார், அஜய்தேவ்கன்.
அவ்ளோதான்!