பரிசு!
மலைப் பாறையை
உடைக்கும் மனிதா
உனக்கு
மலைச்சரிவு எனும்
பரிசு நிச்சயம்!
மலைக் காடுகளை
அழிக்கும் மனிதா
மண்ணரிப்பால்
நிலச்சரிவு எனும்
பரிசு நிச்சயம்!
மரங்களை
அழிக்கும் மனிதா
மழை குறைந்து
வறட்சி எனும்
பரிசு நிச்சயம்!
காடு எனும்
சோலைவனத்தை
அழிக்கும் மனிதா
உனக்கு பாலைவனத்தில் தான்
வாழ்வு எனும்
பரிசு நிச்சயம்!
பூமித் தாயை பிளந்து
நீர் உறிஞ்சும் மனிதா
உனக்கு
நீரின்றி அமையும் உலகு
எனும் புதுமொழி
பரிசு நிச்சயம்!
இயற்கையை காயப்படுத்தி
உன் தேவையை
பூர்த்தி செய்யும் மனிதா
உனக்கு இயற்கை தரும்
நோய் எனும்
பரிசு நிச்சயம்!
நன்மையோ
தீமையோ
உன் செயலின்
பரிசு ஒரு நாள்
நிச்சயம்!
மு. கண்ணன்,
புதுச்சேரி.