நீரோட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2011
00:00

அப்பாவுக்கான பாடம்
கடையில் எதையோ வாங்கிவிட்டு வண்டியில் ஏறும்போது அந்தப் பிச்சைக்காரர் கை நீட்டினார். பிச்சைக்காரர்கள் குறித்துப் பலவித சிந்தனைகள் எனக்குள் இருந்தாலும் என்னை நோக்கி யாசிக்க நீளும் கரங்களில் ஏதாவது கொடுத்துவிடுவதே என் பழக்கம், முதியோர், உடல் ஊனமுற்றோர் விஷயத்தில் இது தவறவே தவறாது. ஆனால் அவருக்கு நான் எதுவும் தரவில்லை. என்னிடம் ஐந்து ரூபாய் நாணயம் மட்டுமே இருந்தது. யாசகத்திற்கு அது அதிகம் என்னும் எண்ணம் என்னுள் ஊறிப்போயிருக்கிறது. தவிர, வண்டிக்குக் காற்றடிக்க வேண்டியிருந்தது.
வண்டி இரண்டடி தூரம் செல்வதற்குள் பின்னாலிருந்து என் பெண் நம்ரதா (அப்போது அவளுக்கு வயது 9) "அப்பா...' என்று கோபமாக அழைத்தாள். "என்ன?' என்றேன். "அவருக்கு ஏன் நீ எதுவும் தரல?' என்று கோபமாகக் கேட்டாள். காரணம் சொன்னேன். "ஸோ வாட்?' என்றாள் அழுத்தமாக. "வண்டில காத்து இல்லேன்னா தள்ளிட்டுத்தான் போகணும்' என்றேன். "போயேன்' என்றாள் பட்டென்று. சிக்னலில் வண்டி நின்றது. அங்கே ஒரு பிச்சைக்காரர் நெருங்கினார். சிக்னலில் பிச்சை எடுப்பதை ஊக்குவிப்பது அபாயகரமானது என்பது என் எண்ணம். ஆனால் நம்ரதாவுக்கு இப்போது அதைப் புரியவைக்க முடியும் என்று தோன்றவில்லை. ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.
சிறிது நேரம் நம்ரதா எதுவும் பேசவில்லை. பிறகு திடீரென்று, "அப்பா, ஐ வாண்ட்டு பிகம் த பிரஸிடென்ட்' என்றாள். "ஏன்?' என்றேன். பிச்சைக்காரர்கள், ஏழைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டுமாம். அதற்காக ஜனாதிபதியாகப் போகிறாளாம். "இந்தியாவில் ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது. பிரதமர் நினைத்தால் ஏதாவது செய்யலாம்' என்றேன். அப்படியானால் பிரதமராக போகிறேன் என்றாள் தீர்மானமாக.
இந்தச் சம்பவத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட போது குவளைக்கண்ணன் சொன்னார்: "இந்தியாவில் ஜனாதிபதியால் எதுவும் செய்ய முடியாது. இது குழந்தை தெரிஞ்சிக்க வேண்டியது. இந்தியாவில் பிரதமராலும் எதுவும் செய்ய முடியாது. இது அப்பா தெரிஞ்சிக்க வேண்டியது.'

அதிசயம்
ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு திருப்பத்தில் நடந்து செல்லும் ஒருவர்மீது மோதாமல் தவிர்க்க டிரைவர் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. "பாத்து...' என்றேன்.
"நீங்க வேற சார்... இவுனுங்கள எல்லாம் இட்ச்சாதான் சார் புத்தி வரும்' என்றார்.
"ஏங்க உங்களுக்கு அவர் மேல அவ்வளோ கோபம்?'
"மொபைல் பேசிகினே போறான் பாருங்க, அவன் ரோட்டையும் பார்க்கல ஆட்டோவையும் பார்க்கல சார். நீங்க கண்டி இல்லேன்னா அவனை இடிச்சிட்டு இருப்பேன் சார்' என்றார்.
"அது தப்பு இல்லையா?'
"சொம்மா சின்னதா ஒரு இடி. கீய உயுவான். அடிபடாது. அப்டி நேக்கா இடிப்பன் சார்.'
"எதுக்காக அப்படிப் பண்ணணும்?' என்று கேட்டதும் ஓட்டுநர் பொங்கிவிட்டார்.
"இன்னா சார்... ரோட்ட பார்க்காம மொபைல் பேசிக்கினே போறான்... போன வாரம் பரங்கிமலைகிட்ட ஒரு பொண்ணு மொபைல் பேசிகினே ரயில்வே டிராக்க கிராஸ் பண்ணிக்கிது. டிரெயின் அடிச்சி ஸ்பாட்லே அவுட் சார்... எத்தினி பேர் இப்படி அடிபட்டு சாவறானுங்கோ தெரிமா சார்? மொபைல் பேசிகினே நடக்கறது, மொபைல் பேசிகினே கயித்த சாச்சிகினு வண்டி ஓட்றது.. இதெல்லாம் டேஞ்சர் சார்...'
இத்தகைய சாவுகளைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். அப்படிப் பேசிக் கொண்டு செல்பவர்களும் படித்திருப்பார்கள். இதை யோசிக்கும்போது ஓர் உரையாடல் நினைவுக்கு வருகிறது:
"உலகில் மிகவும் அதிசயமானது எது?'
"உயிர்கள் நாள்தோறும் எமன் வீட்டுக்குப் போவதை ஒவ்வொரு மனிதனும் பார்க்கிறான். ஆனால் நான் மட்டும் நிரந்தரமாக இருப்பேன் என்று நினைக்கிறான். இதுதான் பெரிய அதிசயம்'
இது மகாபாரதத்தில் யட்சனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்.

நானாகத்தான் கொடுத்தேன்
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து காரில் வந்துகொண்டிருந்தோம். சாலையோரத்தில் மாம்பழங்கள் விற்பனை செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள். காரை நிறுத்தினோம். "நன்றாக இருக்குமா?' என்று கேட்டேன். மாம்பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்மணி அதன் தரத்துக்கு உத்தரவாதம் அளித்தார். ஒரு மாம்பழத்தை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மூன்று கிலோ கட்டச் சொன்னோம்.
என்னுடன் வந்த இரண்டு பேருக்கும் மாம்பழம் கொடுத்துச் சாப்பிட்டுப் பார்க்கச் சொன்னார் அந்தப் பெண். பணம் கொடுக்குபோது மாதிரி மாம்பழத்துக்கும் சேர்த்து பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்தேன். வாங்க மறுத்தார். "பரவாயில்லை' என்று வற்புறுத்திக் கொடுத்தேன். அவர் இன்னொரு மாம்பழத்தை எடுத்து என் கையில் கொடுத்தார். "நானாகத்தான் கொடுத்தேன் அதற்குப் பணம் வாங்குவது நியாயமில்லை' என்றார்.
அவரது வணிக நெறியைச் சொற்களால் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

- அரவிந்தன்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X