அவளே சரணம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2022
00:00

சிறு குச்சியை இறுகப்பற்றி மேலெழுந்து வளர முயற்சித்துக் கொண்டே இருக்கும் கொடி போலத்தான் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரியை சேர்ந்த லட்சுமி. இவர் பற்றிக்கொள்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தாயார் கன்னியம்மாள் உடன் இருந்தார். தற்போது... இறைவனடி சேர்ந்த அன்னைக்கு கோவில் எழுப்பி அதன்மீது கொடியாக படர்ந்து வாழ்கிறார் 61 வயது லட்சுமி.

தாய் பாசத்தை ஊருக்கு காட்டத்தானே கோவில்?

என் அம்மாவுக்கு 13 வயசுல திருமணம்; 14 வயசுல பெரிய மனுஷியாகுறாங்க; 15 வயசுல நான் பிறக்குறேன்; 19 வயசுல அப்பாவை நிரந்தரமா பிரியுறாங்க; 74 வயசுல இறந்துட்டாங்க. இப்படியான என் அம்மா, பல வீடுகள்ல பாத்திரம் கழுவி என்னை வாழ்க்கையில உயர்த்தினாங்க!
இந்த கோவில் தாய் பாசத்திற்கான சின்னம் மட்டுமில்லை; பலவீனத்தின் அடையாளமா பார்க்கப்பட்ட இரண்டு பெண்களோட பலம் சொல்ற சாட்சி!

எப்போதெல்லாம் அம்மா ஆச்சரியமான மனுஷி?
என் அப்பாவோட வாழ அம்மாவுக்கு விருப்பமில்லைன்னாலும், அவரோட என்னை பேசக்கூடாதுன்னு எப்பவும் சொன்னதில்லை. புற்றுநோயால அப்பா இறந்த தகவல் வந்ததும் முகம் பார்க்கப் போனாங்க. அவங்க தரப்புல சில விஷயங்களை நியாயப்படுத்த வாய்ப்பிருந்தும் அவங்க நியாயப்படுத்தலை. தனக்கு தெரிஞ்சது தனக்குள்ளேயே இருக்கட்டும்னு வாழ்ந்த அந்த மனசு எப்பவுமே எனக்கு ஆச்சரியம்தான்!

சில குடும்ப நிகழ்வுகளில் தாயும், லட்சுமியும் அழையா விருந்தாளியாக வருத்தப்பட்டு நின்ற காலமும் உண்டு; இன்று, இருவரும் அன்பின் அடையாளமாகி இருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற லட்சுமி திருமணம் செய்து கொள்ளவில்லை.

தனிமை தந்த அனுபவங்கள்?
மழைக்காலத்துல, மின்வெட்டு நேரங்கள்ல ரொம்ப பயமா இருக்கும். 'உதவி'ங்கிற பேர்ல சிலர் என் பலவீனத்தை அவங்களுக்கு சாதகமாக்க முயற்சி பண்ணியிருக்காங்க. இதனால, ஒருவித எச்சரிக்கை மனநிலையோடவே பதற்றமா இருப்பேன். 'அம்மாவுக்கும், மகளுக்கும் என்ன செலவு இருக்கப் போகுது'ன்னு எங்களை கடந்து போனவங்க ரொம்பவே அதிகம்!

அம்மா இல்லாத இந்த மூன்று ஆண்டுகள்...
'உன்னை மீறி யாரும் உன்னை எதுவும் செய்திட முடியாது'ன்னு என் சின்ன வயசுல அவங்க எதுக்காகவோ சொன்னது அப்படியே மனசுல ஒட்டியிருக்கு; இந்த வார்த்தைகள்தான் எனக்கான வழிகாட்டி. ஆனாலும், உருவமா அம்மா என் கூடவே இருக்கணும்னு அவங்களை சிலையா வடிச்சு கோவில் எழுப்பிட்டேன்.

இன்னொரு பிறப்பென்றால்... கன்னியம்மாளுக்கு லட்சுமி யார்?
அம்மா.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X