அன்புள்ள சிஸ்டர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2022
00:00

வனஜாவுக்கு 5 வயது இருக்கையில் தந்தை இறந்து போகிறார். ஆதரவாக இருந்த அண்ணன் விபத்தில் தவறுகையில் வனஜா பிளஸ் 2 மாணவி. தற்போது ஒப்பந்த செவிலியாக திருவாரூர், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

பணி துவக்கம்: 2002
முதல் களம்: தனியார் மருத்துவ
மனை, மன்னார்குடி.
பதவி: செவிலி
துறை அனுபவம்: 20 ஆண்டுகள்

அம்மா பாடம்
உறவுகள் துணையில்லாம அம்மா என்னை வளர்த்தாங்க. 'எல்லார்கிட்டேயும் பேசு; கணீர் குரல்ல பேசு; வெளியில போக பயப்படாதே; ஆனா, வெளியில உள்ள ஆபத்துகளை தெரிஞ்சு வைச்சுக்கோ'ங்கிறது அம்மா சொல்லித் தந்த பாடம். திருமணம், குழந்தைன்னு ஆன பிறகு ஒரு செவிலியா பலதரப்பட்ட மனிதர்களை தொட்டு அணுகுறப்போ இந்த பாடத்தைதான் பாதுகாப்பு வளையமா நான் உணர்றேன்!

நோயாளிகள் சொல்ற பொய்களை கண்டுபிடிச்சிடுவீங்களா?
வழக்கறிஞராகுற ஆசை இருந்ததாலோ என்னவோ, ஒரு விஷயத்தை பல கோணத்துல அணுகுறது என் வழக்கம். பெரிய பிரச்னையை 'ஒண்ணும் இல்லை... சாதாரண காய்ச்சல்'னு கடந்து போறவங்களையும் பார்த்திருக்கேன்; தன்னை காப்பாத்திக்க 'நெஞ்சு வலி'ன்னு நாடகம் போடுறவங்களையும் பார்த்திருக்கேன். என்ன ஒண்ணு... எங்க பணியில இந்த புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக்க முடியாது!
ஆறரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 39 வயது வனஜாவுக்கு, தன்னை போன்றோரை ஒப்பந்த பணியாளர்களாகவே அரசு வைத்திருப்பதில் வருத்தம். 'ஒப்பந்த ஊழியராக இத்தனை காலம் பணியாற்றியவர்களுக்கும், 'கொரோனா' காலத்தில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்களுக்கும் ஒரே ஊதியம் என்றால் எங்கள் அனுபவத்திற்கு என்ன மதிப்பு' என்று வெதும்புகிறார்.

24/7 செவிலி
சில மாதங்களுக்கு முன்னால, என் பார்வையில ஒரு விபத்து. இரு சக்கர வாகனத்துல வேகமா போன இளைஞன், குறுக்கே வந்த ஆடு மேல மோதி கீழே விழுந்துட்டான். லேசான ரத்த கசிவு; ஆனா, சுவாசம் இல்லை. உடனே முதலுதவி பண்ணினேன். 'கோல்டன் ஹவர்'னு சொல்லப்படுற அந்த கணத்தை சரியா பயன்படுத்தினதால அவன் உயிர் பிழைச்சுட்டான்.

நீங்க யாருக்கெல்லாம் கடன்பட்டிருக்கீங்க?
நர்சிங் படிச்சுட்டு இருந்தப்போ இறுதி தேர்வு சமயத்துல எனக்கு மூளை காய்ச்சல்; எந்த உணர்வுமில்லாம மூன்று நாட்கள் படுக்கையில இருந்து மீண்டேன்; அந்த நாட்கள்ல என்னோட படிச்ச 14 மாணவியரும் உணவு எடுத்துக்காம எனக்காக பிரார்த்தனை பண்ணியிருக்காங்க; அந்த நன்றிக்கடனை என் வாழ்க்கையில தீர்க்கவே முடியாது.

சுருக்!

'செவிலியரோட உழைப்புக்கேற்ற பலன்களை கொடுங்க'ன்னு மக்கள் ஏன் குரல் எழுப்பத் தயங்குறாங்க?

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subramanian -  ( Posted via: Dinamalar Android App )
13-மார்ச்-202216:16:30 IST Report Abuse
subramanian உங்களுக்கு எல்லா நலன்களும் பெற வாழ்த்துக்கள். ஆண்டவன் ஆசி உங்கள்ளுக்கு என்றென்றும் உண்டு. வாழ்க வளத்துடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X