தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
'பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் அல்லாமல் விருதுநகர் பாலியல் வழக்கு நிச்சயம் முறைப்படுத்தப்படும். குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரப்படும். இந்தியாவிற்கே 'மாடல் வழக்கு' இதுவாக இருக்கும்'னு சட்டசபையில நீங்க முழங்கினதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆரவாரம் பண்றாங்க!
ஏன் சார்... தலைகுனிய வேண்டிய விஷயத்துக்கு இப்படி ஆரவாரம் பண்ணலாமா; இத்தனைக்கும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்ல ஒருத்தர் தி.மு.க., உறுப்பினர்!
'தி.மு.க.,விற்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்லாது தி.மு.க.,விற்கு வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு ஓட்டு போடாமல் விட்டு விட்டோமே என வருந்தும் அளவிற்கு ஆட்சி இருக்கும்' என்றுதானே இன்றும் சொல்லி வருகிறீர்கள். அப்படியிருக்க, அ.தி.மு.க., ஆட்சிக்கு 'பொள்ளாச்சி' சம்பவம்;
தி.மு.க., ஆட்சிக்கு 'விருதுநகர்' சம்பவம் என்று தமிழக கலாசாரம் அழுகி வருவது ஏற்புடையதா?
'குற்றம் நிகழாமல் தடுப்பதே காவல் துறையின் கடமையாக இருக்க வேண்டும்' என்று நீங்கள் விரும்புவது போல் நிஜம் இருக்கிறதா; 'பெண்களை பாதுகாப்பவர் தமிழக முதல்வர்' எனும் பட்டமா... 'பெண்களை பாழாக்கியவர்களை தண்டிப்பவர் தமிழக முதல்வர்' எனும் பட்டமா... எதன்மீது ஆசை கொண்டிருக்கிறீர்கள்?
- அச்சத்துடன் அன்றாடம் நகரப் பேருந்தில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தின் ஏழைப் பெண்.