கூகுள் மொழி பெயர்க்கிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2011
00:00

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.
தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.
மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.
இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன்.
அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது.
இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது.
I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby
இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது.
வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி இது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B M ஜவஹர் கிருத்தி - ஜல்கான்,இந்தியா
08-ஜூலை-201123:12:51 IST Report Abuse
B M  ஜவஹர்  கிருத்தி திரு,ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் , தாங்கள் மேலே குறிபிட்டுள்ள கூகுள் மொழி பெயர்ப்பு செய்தி எனக்கு மிக மிக இனிமையாக இருந்தது ஆனால் அதில் உள்ள லிங்க் ஓபன் ஆகவில்லை தயவுசெய்து சரியான லின்க்கைஅடுத்த கம்ப்யூட்டர் மலரிலாவது தந்து என்னது தொழில் மற்றும் வழிகைக்கு வழி காட்டவும், நன்றி ,வணக்கம் .
Rate this:
Share this comment
Cancel
B.M. ஜவஹர் - ஜல்கான்,இந்தியா
05-ஜூலை-201120:49:20 IST Report Abuse
B.M.  ஜவஹர் தினமலர் ஆசிரியருக்கு வணக்கம் .கம்ப்யூட்டர் மலர் எனக்கு பல வழியில் பயன்தருகிறது. தமிழ் Translate Link-ல் கிளிக் செய்தல் அது open ஆகவில்லை,தயவுசெய்து சரியான விளக்கம் தரவும். நன்றி வணக்கம்.
Rate this:
Share this comment
Cancel
jayanthi - chennai,இந்தியா
04-ஜூலை-201111:24:44 IST Report Abuse
jayanthi The computer malar is very useful for all. Every time, whenever I have doubt (but not writing a letter to you) you have cleared the same instantly. I like this very much. Now my doubt is "I WANT TO CHANGE THE PDF FILE TEXT IE. NOTEPAD OR WORDPAD" Is it possible? Where can I get at " free download"as I need for office use. please help me. jI also desire to see my name in the computer malar "kelvi padil page. Jayanthi, vandalur.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X