மைலேஜ் மன்னனான மாருதி சுஸுகி வேகன்ஆர் டூர் எச்3 கார் அறிமுகமாகி உள்ளது. டாக்சி, பொது போக்குவரத்து சேவைக்கு ஏற்றது.
இதன் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், கே10 சி பெட்ரோல் இன்ஜின், 64 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிஎன்ஜி(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மாடல் 56 பிஎச்பி பவரையும், 82 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25.40 கி.மீ., மற்றும் ஒரு கிலோ சிஎன்ஜி.,க்கு 34.73 கி.மீ., மைலேஜ் கொடுக்கும்.
சுப்பீரியர் ஒயிட், சில்கி சில்வர் வண்ணங்களில் கிடைக்கும். பெரிய ஹெட்லைட், 5 சீட்டர் கேபின், மல்டி பங்ஷன் ஸ்டியரிங் வீல், பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி, டூயல் ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், டூயல் டோன் வண்ணத்தில் கேபின், அனைத்து சீட்டுகளுக்கும் ஹெட்ரெஸ்ட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், தரமான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் சிறப்பம்சம்.
விலை: ரூ. 5.39-6.34 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்:
Popular, Anna nagar - 92821 11666
Khivraj, mount road - 98417 36381
கோவை டீலர்: AMBAL AUTO - 88706 61666