பெண்மை என் பெருமை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2022
08:00

கவலைகளே சிலருக்கு வாழ்க்கை; மீனா சத்தியமூர்த்தியின் பூர்வீகம் கரூர்; திருமணத்திற்குப் பின் சென்னை வந்தவர், தற்போது வசிப்பது ஜாபர்கான்பேட்டையில்!

மீனாவின் சமூகப்பணி - துவக்கப்புள்ளி எது?
அப்போ எனக்கு 9 வயசு. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த கோவிலை ஒட்டி ஒரு தண்ணீர் குழாய். அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு குப்பை தொட்டி. என் உண்டியல்ல இருந்த காசுல 'சார்ட் பேப்பர்' வாங்கி, 'குப்பைகளை கொட்டுங்கள்; இங்கே குப்பை தொட்டி கழுவாதீர்கள்'னு எழுதி ஒட்டினேன். ஆரம்பம் இதுதான்!

மீனாவின் குடும்பம்...?
என்னோட 3 வயசுல அப்பா இறந்துட்டார். அந்த துக்கத்துலேயே அடுத்து அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க! மகளா நினைச்சு வளர்த்த பாட்டி என் 6 வயசுல இறந்துட்டாங்க; 'நீ தனியா தவிச்சிடக் கூடாது'ன்னு 15 வயசுல எனக்கு திருமணம் பண்ணி வைச்சுட்டு அடுத்த 3 மாசத்துல தாத்தாவும் போயிட்டார். திருமணமான 4 ஆண்டுகள்ல கணவரையும் பிரிஞ்சு தனி மரமா ஆயிட்டேன்!
திருமண முறிவுக்குப் பின் சுயமாக இயங்கத் துவங்கிய இவர், தன் பசி தணிக்க பல பணிகளைச் செய்திருக்கிறார். 'கொரோனா' காலம் இவரது பணிகளை முடக்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் 'கொரோனா' வார்டில் தன்னார்வலர் பணி. தற்போது இயற்கை விளைபொருட்களை சேகரித்து, முகநுால் மூலமாக விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

அன்புக்கு ஏங்குகிறாரா மீனா?
ஒரு சிக்னல்ல அம்மா - அப்பாவோடு பைக்ல ஒரு பெண் குழந்தை. கூர்ந்து பார்க்கிறேன்... 'சட்'டுன்னு அந்த குழந்தை என்னை பார்த்து சிரிக்கிறா; போதும்... எனக்கு இது போதும்!
இப்படியான சந்தோஷம் தினம் ஏதோ ஒரு வகையில கிடைச்சிடுது. அதனால, எனக்குள்ளே எந்த ஏக்கமும் இல்லை!
சாலை விழிப்புணர்வு, ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் என பல தளங்களில் இயங்கிவரும் மீனாவிற்கு, 'மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள்' என்பது அழுத்தமான எண்ணம்; 'இந்த எண்ணமே தான் சந்திக்கும் அனைவரையும் நல்லவர்களாக காட்டுகிறது' என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!

எதிர்காலம் பயமுறுத்தலையா?
'கொரோனா' காலத்துல உறவுகள் இருந்தும் அனாதையான எத்தனையோ உடல்களை நான் உறவா இருந்து அடக்கம் பண்ணியிருக்கேன். பாதிக்கப்பட்டு மீண்ட பலர், 'நீதான்மா என் நம்பிக்கை'ன்னு சொல்லியிருக்காங்க.
'மீனாம்மா'ன்னு கொரோனா வார்டே கூப்பிடுற அளவுக்கு வாழ்ந்திருக்கேன். 'அன்பு இருக்கிற வரை யாரும் அனாதைகள் இல்லை'னு அழுத்தமா நம்புறேன்;
அதனால, எதிர்காலத்தை பற்றின எந்த பயமும் எனக்கில்லை.

மீனாவின் புதுப்புது அர்த்தங்கள்!
உறவுகள்? - புதையல்
அன்பு? - ஆக்ஸிஜன்
ஏமாற்றம்? - வரம்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X