புதுப்பொலிவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நான்கு ஏர்பேக்குகள், கர்டென் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஐஎம்டி கியர்பாக்ஸ், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆல் வீல் டிஸ்க், பேடில் ஷிப்டர்கள், 4.2 இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செமி லெதர் இருக்கை, இம்பீரியல் புளூ, ஸ்பார்க்கிளிங் சில்வர் வண்ணம் போன்றவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
சொனட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் (83 பிஎச்பி பவர், 115 என்எம் டார்க் திறன்), 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்(120 பிஎச்பி பவர், 172 என்எம் டார்க் திறன்), 1.5 லிட்டர் டீசல்(100 பிஎச்பி பவர், 240 என்எம் டார்க் திறன்) என மூன்று இன்ஜின் ஆப்ஷன் உண்டு. செல்டோஸ் காரிலும்1.5 லிட்டர் பெட்ரோல்(115 பிஎச்பி பவர், 144 என்எம் டார்க் திறன்), 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல்(140 பிஎச்பி பவர், 242 என்எம் டார்க் திறன்), 1.5 லிட்டர் டீசல்(115 பிஎச்பி பவர், 250 என்எம் டார்க் திறன்) என மூன்று இன்ஜின் உண்டு. 6 ஸ்பீடு மேனுவல்/ ஐஎம்டி/7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
தவிர, எல்இடி விளக்குகள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டெட் செயலி, ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூப், குரூஸ் கன்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம்.
விலை (எக்ஸ்ஷோரூம்)
சொனட்-ரூ. 7.15-13.69 லட்சம்
செல்டோஸ்-ரூ. 10.19-18.45 லட்சம்
சென்னை டீலர்: SVM Kia motors - 89390 60000
கோவை டீலர்: Pressana kia motors - 63844 41021